தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!!

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!! 1

தென்மேற்கு பருவ மழையில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 16ஆம் தேதி முதல் பெய்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கன மழை இருக்கும் என்று ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி மிக அதிகமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் செவ்வாய் கிழமை மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் அதிக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத்தின் தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில், ”தென் தமிழகம் மற்றும் குமரி கடல் ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கோவை, கடலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, மதுரை, தேனி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Leave a Comment