
கடந்த சில வாரமாக கோலிவுட்டின் ஒரு பேச்சு நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் செய்தியே. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக சென்னையை அடுத்த மஹாபலிபுரத்திலுள்ள தனியார் ரெசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டுமே பங்கேற்ற இந்த நிகழ்வு தான் 5 நாட்களாக ட்ரெண்டிங் நியூஸ். நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, ஷாருக் கான், வசந்த்ரவி, விஜய் சேதுபதி,திலீப், இயக்குனர் மணிரத்னம், அட்லீ, கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடன இயக்குனர் பிருந்தா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, தயாரிப்பாளர் போனி கபூர் என பலர் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர். வீடியோ கீழே கொடுக்கப்டுள்ளது.

திருமண முடிந்த கையோடு திருப்பதி சென்ற இருவரும் அங்கு சாமி தரிசனம் செய்து வெளியே வந்து போட்டோஷூட் எடுத்த போது காலணிகளுக்கு தடைசெய்யப்பட்ட இடத்தில செருப்புடன் அலைந்ததால் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கடிதம் எழுதியும், உங்கள் மேல் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. திருமணத்தின் போது ரிசார்ட் பின்புறத்தில் இருந்து கடற்கரைக்கு வாக்கிங் சென்ற போது மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டது என இன்னும் இவர்களுடைய சர்ச்சைகள் அடங்கிறவில்லை.

அதற்குள்ளாகவே டாக்டர் ஒருவர் உங்களுக்கு குழந்தை பிறக்காது உங்களுக்கு IVF தான் உதவணும் அப்படி’னு சொல்லி சர்ச்சையை கிளப்ப, அவரை பாடகி சின்மயி வறுத்தெடுக்க, அதற்கு பலரும் ஆதரவுகளும், பலரும் கண்டனங்களும் கிளம்ப, அந்த மருத்துவரே மீண்டும் இதுபோல தான் கூறிய விஷயத்தை நியாயப்படுத்தி மீண்டும் நயந்தாரா, சின்மயி, தனியார் செய்தி ஊடகம் ஒன்றையும் இணைத்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த விஷயமே இப்பொது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இப்பொது அடுத்தக்கட்ட பிரச்சனை இவர்களுக்கு வந்துள்ளது. ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க போகிறோம் என்று கூறி இருவருக்கும் கொஞ்சம் தலைவலியை கொடுக்க, இப்பொது திருமணம் குறித்தே ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதாவது தனியார் OTT நிறுவனத்திற்கு ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர்களுடைய திருமணம், மிகவும் நிறைய கட்டுபாடுகளுடன் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 60 பௌன்சர்ஸ் பாதுகாப்பு பணிக்காக அங்கே இருந்தனர். திருமணத்திற்கு வருபவர்களுடன் சாதாரணமாக அருகிலுள்ள பீச்சிற்கு வாக்கிங் சென்றவர்களுக்கும் கொஞ்சம் பிரச்சனை கொடுத்தார்கள் அவர்கள். இது அப்போதே கொஞ்சம் பிரச்சனையாக உருவானது.

இப்பொது மனித உரிமை ஆணையத்தில் சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனியார் திருமண விழாவிற்காக அருகிலுள்ள கடற்கரைக்கு மக்கள் செல்ல கூடாது என தடை விதிக்க யாருக்கும் உரிமை கிடையாது. கடற்கரை என்பது போது இடம். அங்கு ஒருவர் போக கூடாது என சொல்வது தவறான செயல் என கூறி அவர் இந்த புகாரை அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட மனித உரிமைகள் ஆணையம் இந்த புகாரை நிச்சயம் விசாரிப்பதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்குகள், விமர்சங்கள் பற்றி கவலை இன்றி நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளதாக சில புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர அவை அனைத்துமே ரசிகர்களிடம் மிகவும் வைரலானது.

இப்பொது ஹனிமூன் முடித்து இந்திய திரும்பியுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் கோவில் ஒன்றிற்கு விசிட் அடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த நயன்தாராவின் தீவிர ரசிகர் ஒருவர், திடீரென அவர் காலில் விழுந்துள்ளார். இதை கண்டு பதறி போய், ரெண்டடி தள்ளி நின்றுள்ளார் நயன். இந்த வீடியோ இப்பொது வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த விடியோவை காண….
Video Courtesy – RadioChannel