விஜய் டிவி-ல் ஒளிப்பரபாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில் அப்படி ஒளிப்பரபாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. கடந்த மூன்று சீசன்களாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பு உள்ளது. மேலும் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிக்ழச்சி 4-வது சீசன் தொடங்கியுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து கடந்த வாரம் முதல் அறிமுகமாகி வந்தனர். இதற்கிடையே தற்போது இந்த வாரம் புதிய ஜோடிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். Video given below.

ஆம், அதன்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முலம் பிரபலமான அஜய் தனது மனைவியுடன் புதிய ஜோடியாக அறிமுகமாகியுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. அஜய் சென்னையை சேர்ந்தவர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பலமுறை வியக்க வைத்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு படங்களில் பாட வாய்ப்பு பின் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பாடல்களை பாடி வருகிறார். அஜய் கிருஷ்ணா தற்போது பின்னணி பாடகராக திகழ்கிறார்.

இந்நிலையில் கடந்த மே 13 ஆம் தேதி அஜய் கிருஷ்ணாவுக்கும் ஜெஸிக்கும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இப்பொது இருவரும் நடைபெற்று வரும் விஜய் டிவியின் Mr. & Mrs.சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள். சென்னையில் வந்துள்ள Cruise Shipஇல் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு அரங்கில் தன்னுடைய காதல் மனைவிக்காக தனியாக “நானும் ரவுடி தான்” படத்தில் இடம் பெரும் “கண்ணனே கண்ணே” பாடலை பாடியுள்ளார். இதில் நெகிழ்ந்து போன ஜெஸ்ஸி கொஞ்சம் கண்கலங்கினார். இந்த ப்ரோமோவை விஜய் டிவி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
Video Courtesy – Vijay television