தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக வந்தாலும், இன்று தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் சூர்யா. சிவகுமாரின் மகனான இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “நேருக்கு நேர்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சில காலம் வெற்றிக்காக காத்திருந்த இவருக்கு பாலாவின் “நந்தா” படம் மிக பெரிய அளவில் காய் கொடுத்தது. அதற்கு முன் சில காமெடி , காதல் படங்கள் நடித்து இருந்தாலும் மக்கள் இவரை நந்தா படத்தின் மூலம் தான் ஒரு தனி நாயகனாக ஏற்று கொண்டனர்.

தொடர்ந்து ஆறு, வேல், காக்க காக்க, பிதாமகன், உன்னைத்தேடி,ஜில்லுனு ஒரு காதல், கஜினி, சிங்கம், வாரணம் ஆயிரம், கடைசியாக இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்ரம் படம் வரை, தன்னை மட்டமாக பேசிய அனைவர் முன்பும் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டே இருக்கிறார். நடிப்பிற்காக எப்போதும் பாராட்டப்படும் சூரியா சமூக சேவைகளிலும் முனைப்பு கட்டி வருபவர்.

நீண்ட ஆண்டுகள் முன்பே, அகரம் என்ற பவுண்டேஷனை உருவாக்கி, அதன் மூலம், கல்வி பயில கஷ்டப்பட்டு வரும் ஏழை எளிய குழந்தைகள் பலருக்கும் சொந்த முயற்சியில் கல்வி கொடுத்து வருகிறார். வெளியில் மக்களுக்கு இந்த விஷயம் தெரிந்தாலும் பெரிதாக அதனை பிரபல படுத்திக்கொள்ளும் முனைப்பில் அவர் இல்லை. இவருடைய மனைவி ஜோதிகாவும் அந்த செயலை ஒரு போதும் செய்தது இல்லை.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நடிகர் சூர்யாவின் இரண்டு படங்கள் OTT தளங்களில் வெளியாகின. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, “பூ” ராமு என பலர் நடிப்பில் வெளியான படம் “சூரரை போற்று”. தொடர் தோல்விகள் துண்டு போயிருந்த நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தை இந்த படம் மீண்டும் புத்துணர்ச்சி பெற செய்தது. படம் மிக பெரிய கவுரவமான “ஆஸ்கார்” நாமினேஷன் பெற்றது. மிக பெரிய அளவில் ரசிகர்களும், விமர்சகர்களும் படத்தை வரவேற்றனர்.

இதனை அடுத்து எடுக்கப்பட்ட “ஜெய் பீம்” படம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சந்துரு என்ற ஒரு வழக்கறிஞரின் வழகியை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் வரவேற்பையும், சர்ச்சைகளையும் சேர்ந்தே பெற்றது. மிக பெரிய அளவில் மக்களால் கொண்டாடப்பட்ட இந்த படம், அரசியல் சர்ச்சைகள் பலவற்றை பெற்ற போதிலும், படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ஆஸ்கார் நாமினேஷனுக்கு இந்திய சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடைசியில் தேர்வாகாமல் போனாலும் படத்தை பார்த்த நடுவர்கள் கூட படத்தை பாராட்டி வாழ்த்துக்களை வெளியிட்டனர். இது சூரியாவிற்கும், படக்குழுவிற்கும் மிக பெரிய மரியாதையை கொடுத்தது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள “95வது ஆஸ்கார் விருதுகள்” அமைப்பின் சார்பில் ஆஸ்கார் அமைப்பின் உறுப்பினராக, அந்த அமைப்பு சார்பில் சூர்யாவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இப்பொது வெளியாகி மிக பெரிய அளவில் பகிரப்படுவதுடன் நடிகர் சூர்யாவிற்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த பட்டியலில் மற்றொரு இந்திய நடிகை கஜோலும் உள்ளார்.

உலகளவில் பெருமை சேர்த்து வரும் சூர்யாவிற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். சூர்யா சமீபத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் அசத்திய நிலையில் அடுத்ததாக பாலா இயக்கத்தில் ’சூர்யா 41’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ அதனை அடுத்து சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, உள்பட பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.