பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அனைவராலும் பார்க்கப்படக் கூடிய ஒரு நிகழ்ச்சியாக, விஜய் டிவியால் ஒளிபரப்பட்டு வந்தது பிக்பாஸ். சீசன் 5ல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் தான் அபிஷேக் ராஜா. இவர் போட்டியில் கலந்து கொண்ட நாள் முதல் இவர் வெளியேறும் வரை ரசிகர்களிடையே வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார். இவருடைய அதீதமான பேச்சுக்கள் பார்ப்பவர்களுக்கு வெறுப்பை கொடுத்தது. அதனால் தான் இரண்டாவது ஆளாக வெளியேற்றப்பட்டார். மேலும் பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பே வெளியில் இவர் பிக்பாஸை பற்றியும், கமலஹாசனைப் பற்றியும் கடுமையாக விமர்சித்து இருந்தார். நீ முதலமைச்சர் ஆவதற்கு பிக்பாஸ்ன்னு ஒன்னு நடத்துற பாரு என்று கமலை நேரடியாக தாக்கி பேசி இருப்பார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட பின்னர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒருமுறை கூட பார்த்ததேயில்லை என்று முன்னுக்குப்பின் முரணாக சொல்லி கமலிடம் மாட்டிக் கொண்டார். பின்னர் மீண்டும் இவரை வைல்ட் கார்ட் என்று சொல்லி உள்ளே கொண்டு வந்தனர் பிக்பாஸ் டீம். மக்கள் ஒருமுறை வெளியே அனுப்பிய நபரை இஷ்டத்திற்கு வைல்ட் கார்ட் எனச் சொல்லி உள்ளே அனுப்புவது மீண்டும் மக்களுக்கு எரிச்சலை கொடுத்தது. எனவே மீண்டும் அவர் வெளியேற்றப்பட்டார்.

தற்போது பிக்பாஸில் கலந்து கொண்டவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது விஜய் டிவி. தற்போது சீசன் 2 நடந்து வருகிறது. முதல் சீசனில் கலந்து கொண்ட வனிதாவுக்கும், நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கும் மோதல் ஏற்பட்டு வனிதா வெளியேறியது எல்லாம் தனிக்கதை. மீண்டும் ரம்யா கிருஷ்ணனே நடுவராக பங்கேற்ற சீசன் 2 கோலாகலாக ஆரம்பித்துள்ளது விஜய் டிவி. இதில் சீசன் 5ல் பங்கேற்ற பலர் பங்கேற்று உள்ளனர். இந்த முறையும் ரம்யா கிருஷ்ணனும், நடன இயக்குனர் சதீஷும் நடுவர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நீங்கள் யாருக்காவது சாரி கேட்க வேண்டும் என்று விரும்பினால் யாருக்கு மன்னிப்பு கேட்பீர்கள் என்று கேட்க, அபிஷேக் ராஜா கண்ணீர் மல்க பேசினார். அபிஷேக்கின் அப்பா மதுரையில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அபிஷேக்கை பார்க்க வேண்டும் என்று ஒரு முறையாவது வந்து பார்த்துவிட்டு போக சொல்லியிருக்கிறார். ஆனால் அபிஷேக்கால் போக முடியவில்லை. அதற்குள் அவரது அப்பா இறந்துவிட்டார். அந்த நிகழ்ச்சியை கூறி சாரி அப்பா என்று கூறி கதறி அழுதார். அதை பார்த்த சக போட்டியாளர்கள் கண்களும் கலங்கின. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Vijay Television