விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. மதியம் தொடங்கி இரவு வரை பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ‘கிழக்கு வாசல்’ சீரியல் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 200 எபிசோடுகளை கூட தாண்டாத நிலையில் தற்போது சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது.

நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் முதல் முறையாக சீரியலில் நடிக்க வந்த தொடர் ‘கிழக்கு வாசல்’ இந்த தொடரில் வெங்கட் ரங்கநாதன், ரேஷ்மா முரளிதரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் மாலை வேளையில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் பின்னர் இரவு 10 மணிக்கு மாற்றப்பட்டது. பின்னர் அதையும் மாற்றி மதியம் 4 மணிக்கு சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பல திருப்புமுனைகளை சீரியல் குழுவினர் வைத்த போதும். சீரியலுக்கு பெரிய அளவிலான வரவேற்பு மக்களிடம் கிடைக்கவில்லை.

எனவே தற்போது இந்த சீரியலை முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இரட்டை வேடங்களில் ஹீரோ நடிப்பது போல கதைக்களம் நகர்ந்து வருகிறது. இதில் ஜெயிலில் இருக்கும் மற்றொரு ஹீரோ வெளியில் வந்து உண்மைகளை கூற வேண்டும் என்பது போல கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை ராதிகா சரத்குமாரின் ரேடான் மீடியா தயாரித்து வந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் போதிய வரவேற்பின்மை காரணமாக சீரியல் முடிவுக்கு வர இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
View this post on Instagram