விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கதிர் மற்றும் ராஜு இருவருக்கும் காதல் மலர்கிறது. இத்தனை நாட்களாக சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரும் தற்போது இணையத் தொடங்கி இருக்கின்றனர். அந்த அழகிய ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரில் மூர்த்தியின் கடைசி மகனாக இருக்கும் கதிருக்கும் அவரது மாமன் மகள் ராஜிக்கும் திருமணம் நடைபெறுகிறது. ராஜி ஒருவனால் ஏமாற்றப்பட்டு திருச்செந்தூரில் தனியாக விடப்பட்ட நிலையில் அங்கு வந்த கதிரின் தாயார் கோமதி ராஜுக்கு ஆதரவு கொடுக்கும் பொருட்டு, அவரை தனது மகன் கதிருக்கே திருமணம் செய்து வைக்கிறார். இருவரும் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஆரம்பத்தில் இவர்களது வாழ்க்கை மோதலில் தொடங்கிய நிலையில், தற்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் லேட்டாக வரும் கதிருக்கு ராஜி உணவு பரிமாறுகிறார். அதை பார்க்கும் கதிர் கண் முழித்து உடலை கெடுத்துக்கொள்ளாதே என அட்வைஸ் செய்கிறார். இதனால் ராஜிக்கு கதிர் மேல் பாசம் வருகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television