
இலங்கைப் பெண்ணான பூஜா உமாசங்கர் தமிழில் வெளியான மாதவனின் “ஜே ஜே” படம் மூலம் நாயகியாக அறிமுகனானார். ஒருதலையாக நடிகர் மாதவனை காதலிக்கும் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து அஜித்தின் “அமர்க்களம்”, ஆர்யாவின் “ஓரம் போ”, “உள்ளம் கேட்குமே, பரத்துடன் “பட்டியல்” என வரிசையாக படங்கள் வெளியாகின.

இருப்பினும் இவருக்கு மிக பெரிய பெயரை வாங்கிக்கொடுத்த படம் என்றால் அது இயக்குனர் பாலாவின் “நான் கடவுள்” படமே 2009ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அவர் கண்பார்வை தெரியாத பெண்ணாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் அள்ளினார். இதன் பிறகு தமிழ் படங்களில் மிக பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் அவர்க்கு அதன் பின் பெரிய பட வாய்ப்புகளே வரவில்லை.

சிங்கள மொழி பெண் என்பதால் அங்கும் சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மொழி பட வாய்ப்புகளும் சிலது வர அதிலும் அவர் சிறப்பாகவே நடித்துள்ளார். தமிழ் பேச தெரிந்த, நன்றாக நடிக்க கூடிய திறமைகள் இருந்தும் தமிழ் இயக்குனர்கள் இவரை படங்களில் நடிக்க வைக்க தவறினர். 2013 ஆம் ஆண்டு “விடியும் முன்” இடமே இவரின் கடைசி தமிழ் படமாக இருந்து போனது.

அதன் பின் சில சிங்கள மொழி படங்களில் நடித்த இவர் 2016ஆம் ஆண்டு பிரஷாந்த் டேவிட் எனும் சிங்கள தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சமூகவலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கி இருக்கும் இவர், அடுத்து என செய்து கொண்டிருக்கிறார் என ரசிகர்களுக்கு தெரியாமலே போனது. இப்பொது ரசிகர் ஒருவர் ‘Once upon a time…there lived a ghost” என தலைப்பு கொடுத்து அவருடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதனை கண்டுள்ள நடிகை பூஜா உமாசங்கர், “நன்றிகள் பல என்னை இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்கு நன்றி…என பதிவிட்டுள்ளார். அதன் கீழே ரசிகர்கள் பலரும் நீங்கள் அடுத்து எப்போது நாயகியாக நடிக்க போகிறீர்கள் என கேட்டமைக்கு “எனக்கு 44 வயசு ஆயிடுச்சு…இனிமே கம்பேக்லாம் ரொம்ப கஸ்டங்க..அதுவும் நடிச்ச சித்தி ரோல் தான் நடிக்கணும்” என ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார். இந்த பதிவு இப்பொது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
