உண்மையாகவே பாக்யா இதில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்..இந்த கதைக்களம் பலரது கண்களில் கண்ணீரை வரவழைக்க உள்ளது…

மக்கள் எதிர்பார்த்த பாக்கிய லெட்சுமி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள கோபிக்கு ராதிகாதான் மனைவி என்று கையெழுத்திட்டுள்ளார். இதனால் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது பாக்கிய லெட்சுமி. விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் பாக்கிய லெட்சுமி. இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை சுசித்ரா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக “சைவம்” என்ற படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் இவருக்கு விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட பாக்கிய லெட்சுமி என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இவரின் யதார்த்த நடிப்பும், நம் வீட்டில் நம் அம்மா போலவே வெகுளி கதாபாத்திரமாக இருப்பதால் இந்த நாடகம் மக்கள் மத்தியில் மிகப்பிரபலமாக உள்ளது. முன்பெல்லாம் நாடகம் என்றாலே சன்டிவி என்று இருந்த நிலையை மாற்றியது விஜய்டிவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையாகவே பாக்யா இதில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்..இந்த கதைக்களம் பலரது கண்களில் கண்ணீரை வரவழைக்க உள்ளது... 1

விளம்பரம்

குடும்ப பாங்கான தொடர்களையும், வில்லன் வில்லி கதாபாத்திரங்களும், நெகடிவ் கதாபாத்திரங்களும் குறைவாக இருப்பதால் விஜய் டிவி தொடர்களை மக்கள் விரும்பி பார்க்க தொடங்கினர். அந்த வகையில் பாக்கிய லெட்சுமி, பாண்டியன் ஸ்டார்ஸ், பாரதி கண்ணம்மா, மௌனராகம் போன்ற தொடர்கள் டாப் ஹிட்டில் உள்ளன. இதில் பாக்கிய லெட்சுமி சற்று வித்தியாசமானது. அதில் வழக்கமான இரண்டு மனைவி கதை என்றாலும் சற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர். இதில் கதாநாயகன் கோபிக்கு மனைவி குழந்தைகள் இருந்த போதிலும், அவர் தனது கல்லூரி கால தோழியிடன் மீண்டும் தொடர்பில் இருப்பது போன்றும், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது தோழியை திருமணம் செய்து கொள்ள இருப்பது போலவும் கதை நகர்ந்து கொண்டுள்ளது.

தொடர்புடையவை  சர்ப்ரைஸில் சொதப்பிய மனைவி.! வீடியோ காலில் வந்த சிவாங்கி.! புகழின் பிறந்தநாள் வீடியோ.!

உண்மையாகவே பாக்யா இதில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்..இந்த கதைக்களம் பலரது கண்களில் கண்ணீரை வரவழைக்க உள்ளது... 3

விளம்பரம்

தற்போது காரில் சென்று கொண்டிருந்த கோபி வேகமாக சென்று மரத்தில மோதி, விபத்தில் சிக்கிவிட்டார். இந்த செய்தியை மருத்துவமனையில் இருக்கும் இருவேறு செவிலியர்கள் பாக்கியா மற்றும் ராதிகா என இருவருக்குமே போன் செய்து கூப்பிட இருவருமே அதிர்ச்சியாகி பதறி அடித்துக்கொண்டு ஒரே நேரத்தில் மருத்துவமனை விரைகிறார்கள். விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள கோபிக்கு ராதிகாதான் மனைவி என்று கையெழுத்திட்டுள்ளார். மேலும் ராதிகாவுடன் பேசிக் கொண்டிருப்பதை பாக்கியா பார்த்துவிட்டார். இதனால் மனமுடைந்த பாக்கியா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Televison

விளம்பரம்

Leave a Comment