11 வருடமாக சிறிய வாடகை வீட்டில் வசித்து வரும் ஜூலி..பிக்பாஸ் சம்பளத்தில் வாங்கிய முதல் ஸ்கூட்டி..ஜூலியின் அழகான home tour வீடியோ

பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டவர்களில் மிக முக்கியமானவர் ஜூலி. இவர் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் எழுப்பிய கோஷங்கள் மூலம் தமிழ்நாட்டில் மிகப்பிரபலமானார். இவரை “வீரத்தமிழச்சி” என்று புகழ்ந்து மீம்ஸ்கள் பறந்தன. அந்த புகழைக் கொண்டு பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். ஆனால் பிக்பாஸில் இவரது செயல்களால் கடுமையான கேலிக்குள்ளனார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் ஏற்பட்ட சண்டையினால் இவருக்கு குறும்படம் காட்டப்பட்டது. அது முதல் இன்று வரை இவரை நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வந்தனர். இவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் கலந்து கொண்ட போது இவரைப் பற்றிய பார்வை சற்று மாறியது. பலர் ஜூலிக்கு ஆதரவாக பேசத் தொடங்கினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

11 வருடமாக சிறிய வாடகை வீட்டில் வசித்து வரும் ஜூலி..பிக்பாஸ் சம்பளத்தில் வாங்கிய முதல் ஸ்கூட்டி..ஜூலியின் அழகான home tour வீடியோ 1

விளம்பரம்

ஜூலி பல பேட்டிகளில் தான் சீசன் 1ல் செய்த சில தவறுகள் குறித்து பேசி இருக்கிறார். சீசன் 1ல் கலந்து கொண்ட நான் என்னை அறியாமல் சில தவறுகளை செய்துள்ளேன் என்று அவரே கூறியுள்ளார். மேலும் பிக்பாஸக்குப் பிறகு தனது தாய் தந்தையரை அசிங்கமாக பேசினர், எனது நண்பர்கள் கூட என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர் என்று கண்ணீர் மல்க பேட்டிகளில் கூறியிருந்தார் ஜூலி. கடந்த சீசனில் செய்த தவறை திருத்திக் கொள்ளவே இந்த சீசனுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வளவு பேர் தன்னை கலாய்த்த போதிலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு சிறுவனின் கல்லீரல் சிகிச்சைக்காக ஒரே வாரத்தில் 23 லட்சம் திரட்டி உதவி செய்துள்ளார். தற்போது இதையெல்லாம் மறந்துவிட்டு ஜூலியை பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடையவை  ஒரு மிமிக்கிரி கூட பண்ண தெரியல.! நீயெல்லாம் தேங்கா சீனிவாசன் பேத்தினு வெளிய சொல்லாத.!

11 வருடமாக சிறிய வாடகை வீட்டில் வசித்து வரும் ஜூலி..பிக்பாஸ் சம்பளத்தில் வாங்கிய முதல் ஸ்கூட்டி..ஜூலியின் அழகான home tour வீடியோ 3

விளம்பரம்

ஜீ தமிழில் ஒளிபரப்பான ஒரு நாடகத்தில் சிறப்பு தோற்றத்தில் கூட நடித்துள்ளார் ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். தற்போது தனது ஜாலி வித் ஜூலி யூடியூப் சேனலில் தன்னுடைய வீடு குறித்து Home Tour ஒன்றை பகிர்ந்துள்ளார். மிகச் சிறிய பழமையான வீட்டில் 11 வருடமாக வாழ்ந்து வருவதாக கூறினார். பிக்பாஸ் சீசன் 1ல் வந்த வருமானத்தைக் கொண்டு ஒரே ஒரு ஸ்கூட்டியை வாங்கியுள்ளார். மிகச்சிறிய வாடகை வீட்டில் 11 வருடமாக வசித்து வருகிறேன் கண்டிப்பாக ஒரு நாள் சொந்த வீட்டிற்கு சென்று அந்த Vlogsஐ யும் பதிவிடுவேன் என்றும் கூறினார். ஜூலியின் Home Tour வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Jolly With Julie

விளம்பரம்

Leave a Comment