2019ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்தான் பாரதி கண்ணம்மா. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடரில் பாரதியாக நடிகர் அருணும், கண்ணம்மாவாக நடிகை ரோஷ்ணியும் நடித்து வந்தனர். மருத்துவரான கணவர் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவளை வெளியேற்றிவிட்டு தனிமையில் இருவரும் வாழ்ந்து வருவது போன்ற கதை. 4 ஆண்டுகளாக ஜவ்வு போல இழுத்தடித்து வருகின்றனர். தொடர் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் ரோஷ்ணி திடீரென நாடகத்தில் இருந்து தான் விலகி விட்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஏனெனில் அவரையும், அவரது நடிப்பையும் பலரும் விரும்பினர். அவர் தற்போது குக் வித் கோமாளியில் பங்கேற்று வருகிறார்.

தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். இவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷ்ணி போலவே இருப்பதால் கண்ணம்மா கேரக்டருக்கு பொருந்தி போயிருக்கிறார். ஆனால் 4 வருடங்களாக கதையை இழுத்தடித்து வருவதால் பலர் இந்த நாடகத்தை பார்ப்பதையே நிறுத்திவிட்டனர். மனைவியின் மேல் சந்தேகப்பட்ட கணவர் இன்னும் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்காமல் அரைத்த மாவையே அரைத்து நாட்களை கடத்தி வருவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதில் பாரதியின் தம்பியாக அகிலன் மற்றும் அவரது மனைவி அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் வரிசையாக சீரியலை விட்டு விலகினார்கள். இருந்தாலும் அதே கதையை வைத்துக் கொண்டு இன்னமும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அருண் பிரசாத்துக்கும், ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. சசில நாட்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி அருண் பிரசாத்துக்கும், அர்ச்சனாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக சீரியல் வட்டரங்கள் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் அருண் பிரசாத்தும், விஜே அர்ச்சனாவும் ஒன்றாக காரில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர்களுடன் குத் வித் கோமாளி புகழ் ரித்திகாவும் இருக்கிறார். இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் இருவரும் காதலிப்பது குறித்து எந்தவிதமான அதிகராப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
