ரொம்ப வருத்தமா இருக்கு, என்னை மன்னிச்சிடுங்க – வீடியோ வெளியிட்டு கதறும் TTF வாசன்..பயப்புடுறீயா குமாரு

வட இந்தியாவில் ஒருவர் இதுபோல் யூடியூப்பில் வளர்ந்தால் அங்கு அவர்களை வரவேற்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஒருவன் வளர்ந்து வந்தால் அவனது வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள் என்று டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் பிரபலமாகி வரும் பெயர்தான் டிடிஎஃப் வாசன். இவர் தனது 23வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர்களுக்கு இணையாக கட்டுக்கடங்காத கூட்டம் இவருக்காக கூடியது. இதை பார்த்த பலரும் யார் இந்த வாசன் என்று தேட ஆரம்பித்தனர். அப்போது யூடியூப்பில் இவரும் இவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து பைக்கில் அதிக தூரம் செல்வது, வீலிங்க் செய்வது, 230 கி.மீ வேகத்தில் பறப்பது போன்ற சாகசங்களை செய்து அதை யூடியூப்பில் வீடியோக்களாக பதிவேற்றி வந்தனர். இவரது யூடியூப்பை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 28 லட்சம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரொம்ப வருத்தமா இருக்கு, என்னை மன்னிச்சிடுங்க - வீடியோ வெளியிட்டு கதறும் TTF வாசன்..பயப்புடுறீயா குமாரு 1

விளம்பரம்

பிறந்தநாள் வீடியோ வெளியான பின்பு வாசனை கைது செய்ய வேண்டும் என்றும், அவரது வேகமாக செல்லும் வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் தவறான வழிகாட்டுதலாக உள்ளதாகவும், இதை பார்த்த பலர் தானும் அவ்வாறு செய்து பார்க்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்து டிடிஎஃப் வாசனே ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிலர் என்னைப்பற்றி எதிர்மறையாக பேசி வருகின்றனர். என்ன நடக்கிறது என்று எனக்கே புரியவில்லை என வருத்தத்துடன் பேசினார். மேலும் நான் யாரையும் வேகமாக பைக் ஓட்ட சொல்லியோ, வீலிங், ஸ்டன்ட் செய்ய சொல்லி அறிவுறித்தியதே அல்லை என்று அவர் கூறினார். நான் செய்த அனைத்து வீலிங், ஸ்டன்ட்மே பொது இடங்களில் செய்தவை அல்ல என்றும் தனி இடங்களில்தான் செய்துள்ளேன் என்றும் கூறினார்.

தொடர்புடையவை  "கேட்டா வெறித்தனமான Fan'னு சொல்லுவாங்க!! முதுகில் விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை tattoo செய்துள்ள பெண்"!!

ரொம்ப வருத்தமா இருக்கு, என்னை மன்னிச்சிடுங்க - வீடியோ வெளியிட்டு கதறும் TTF வாசன்..பயப்புடுறீயா குமாரு 3

விளம்பரம்

மேலும் தான் 247கி.மீ வேகத்தில் பைக்கில் சென்றதாக சில தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. ஆம் நான் அந்த வேகத்தில் சென்றது உண்மைதான். ஆனால் அது வட இந்தியாவில் யமுனா விரைவுச் சாலையில் எடுக்கப்பட்டது, அதுவும் பைக்கின் திறனை சோதிப்பதற்காக அந்த வேகத்தில் சென்றதாகவும், பிறரை இப்படி செய்ய சொல்லி ஊக்கப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறினார். அப்படி ஒரு வேளை ஊக்கப்படுத்தியிருந்தால் தன்னை மன்னித்துவிடுமாறு அவர் கூறினார். மேலும் வட இந்தியாவில் ஒருவர் இதுபோல் யூடியூப்பில் வளர்ந்தால் அங்கு அவர்களை வரவேற்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஒருவன் வளர்ந்து வந்தால் அவனது வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள் என்று டிடிஎஃப் வாசன் வேதனையுடன் கூறினார். அவரின் முழு வீடியோவையும் நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Twin Throttlers

விளம்பரம்

Leave a Comment