25 கோடிக்கு விற்ற திருமண வீடியோ..சொதப்பிய பிளான்..ஒரு மாதம் ஆகியும் வெளியிடாத நிறுவனம்

நயன்தாரா தனது திருமணத்தை வைத்து பெரிய பிசினஸ் பிளான் ஒன்றை போட்டு இருந்தார். ஆனால் அது தற்போது கைவிட்டு போனதாக கூறப்படுகிறது. தமிழில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தன.ர் இந்த நிலையில் இருவரும் கடந்த மாதம் மாமல்லபுரம் ரிசார்டில் வைத்து திருமணம் செய்து கொண்டனர் ஜூன் ஒன்பதாம் தேதி நடந்த இவர்கள் திருமணத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிகபட்சமாக 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. அதில் 30 விஐபிகள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. உடை கட்டுப்பாடு, மொபைல் போன் எடுத்து வர கூடாது, க்யூ ஆர் கோடு காண்பித்தால்தான் உள்ளே விடுவோம் என்று பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள்.

25 கோடிக்கு விற்ற திருமண வீடியோ..சொதப்பிய பிளான்..ஒரு மாதம் ஆகியும் வெளியிடாத நிறுவனம் 1

விளம்பரம்

அது மட்டுமில்லாமல் திருமணத்தை முன்னிட்டு மகாபலிபுரத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த பயணிகளுக்கு கூட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. திருமணத்தில் சூர்யா, ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, ஏ ஆர் ரகுமான், அனிருத், அட்லி போன்ற பலர் கலந்து கொண்டனர். ஆனால் அது குறித்த எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய புகைப்படம் மட்டுமே அவரது இன்ஸ்டாகிராமில் வெளியானது. இதற்கு முக்கிய காரணம் தங்களது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் இடம் 25 கோடி ரூபாய்க்கு விற்று விட்டதாகவும், தற்போது புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியானால் அந்த நிறுவனத்திற்கு வருமானம் கிடைக்காது என்பதாலும் ஒரு புகைப்படத்தை கூட வெளியிடாமல் பொத்தி பொத்தி வைத்து இருந்தனர். அதனாலே தான் ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவோ எதுவுமே வெளியாகாமல் இருந்தது.

தொடர்புடையவை  மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா.. கண்கலங்கிய கலா.. ஆனா மீனா செய்த நெகிழ்ச்சி செயல்.!

25 கோடிக்கு விற்ற திருமண வீடியோ..சொதப்பிய பிளான்..ஒரு மாதம் ஆகியும் வெளியிடாத நிறுவனம் 3

விளம்பரம்

நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண வீடியோக்களை நெட்ப்ளிக்ஸ் தளம் வெளியிடும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு புகைப்படத்தையாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவை பதிவு செய்த நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விலை அதிகமாக இருப்பதால் அதை ஒளிபரப்பு செய்ய இயலவில்லை என்று பின்வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்செட் ஆன நயன்தாரா மற்றும் விக்னேசிவன் தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் திருமண வீடியோவை பார்க்கும் ஆர்வமும் ரசிகரிடம் குறைந்து விட்டது.

25 கோடிக்கு விற்ற திருமண வீடியோ..சொதப்பிய பிளான்..ஒரு மாதம் ஆகியும் வெளியிடாத நிறுவனம் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment