விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமானது பிக் பாஸ். இது தமிழில் மொத்தம் ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது. தற்போது அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி ஆறாவது சீசன் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் முதல் 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமலே இந்த ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து கமல் திடீரென விலகிய போது மீதம் நாட்களை சிம்பு தொகுத்து வழங்கினார். அதனால் அடுத்த பிக்பாஸ் சீசன்களையும் சிம்புவே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விக்ரம் படத்திற்காகத்தான் கமல் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகியதால் படப்பிடிப்புகள் முடிந்து அவர் தற்போது பிக்பாஸில் கவனம் செலுத்த உள்ளார். பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றியும் சில தகவல்கள் கசிந்து வருகிறது. அதன்படி குக் வித் கோமாளியில் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ரக்ஷன் முதல் ஆளாக கலந்து கொள்ள இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இன்று வெளியான தகவலின் படி சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வந்தன. கடந்த சீசனில் தாமரைச்செல்வி என்ற என்ற நாடகக் கலைஞரை பிக்பாஸில் உள்ளே அனுப்பி பிரபலம் ஆக்கினர்.

வெகுளியான அவரது பேச்சும், செயலும், பலரது கவனத்தை பெற்றது. அதே ஸ்டேடர்ஜியை தற்போதும் விஜய் டிவி பின்பற்ற இருப்பதால் சூப்பர் சிங்கரில் பங்கேற்று புகழ்பெற்ற கிராமிய பாடகியான ராஜலட்சுமியை தேர்ந்தெடுத்து இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ராஜலட்சுமி கிராமத்து பாரம்பரிய முறைப்படி புடவை அணிபவர், ஆனால் பிக் பாஸ் வீட்டில் மாடல் உடைகளில் இருக்கும் பெண்களும் இருப்பார்கள். எனவே இதை வைத்து ஒரு பிரச்சனை உருவாகும் என்பதால் இது போன்ற கிராமிய பின்னணி கொண்டவர்களை பிக்பாஸில் இறக்கும் ஒரு புது கணக்கை போட்டு வருகிறது. பிக்பாஸ் டீம்.

இது மட்டுமல்லாமல் சீசன் 2வில் கலந்து கொண்ட பிரபல நகைச்சுவை நடிகரின் என் எஸ் கே வின் பேத்தியும் பாடகியுமான ரம்யாவின் கணவர் சத்யா அல்லது சீசன் 4ல் கலந்து கொண்ட சுச்சி லீக்ஸ் என்ற சர்ச்சைக்கு பெயர் போன சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமாரும் லிஸ்டில் உள்ளனர். இந்த இருவரில் யாரேனும் ஒருவர் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்துமே அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஆகும். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
