இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுட்டு போய்ட்டிங்களே..13வது திருமண நாளில் கண்கலங்கி மீனா போட்ட பதிவு

நேற்று தனக்கு 13-வது திருமண நாள் முடிவடைந்த நிலையில், இன்று தன் கணவரின் புகைப்படத்தை போட்டு மீனா உருக்கமான ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகியிருந்த போதிலும் என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாக தமிழ் உலகில் அறிமுகமானவர் நடிகை மீனா. இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவருக்கும் ஜூலை 12, 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நேற்று இவர்களின் 13ம் ஆண்டு திருமண நாள். இந்த நிலையில் மீனா தன் கணவரின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுட்டு போய்ட்டிங்களே..13வது திருமண நாளில் கண்கலங்கி மீனா போட்ட பதிவு 1

விளம்பரம்

ஜூன் 29ஆம் தேதி இரவு மீனாவின் கணவர் காலமானதாக செய்திகள் பரவின. புறா எச்சத்தால் ஏற்கனவே நுரையீரல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு வந்த அவர், வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட நுரையீரல் பாதிப்பு மிக மோசமானது. இதனால் அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார் மீனா. இந்த நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய உறுப்புகள் கிடைக்காத காரணத்தினால் சிகிச்சை பலன் இன்றி ஜூன் 29ஆம் தேதி இரவு காலமானார். இந்த செய்தி ஒட்டுமொத்த தமிழ் உலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. ரஜினிகாந்த், கே எஸ் ரவிக்குமார், கலா மாஸ்டர், ரம்பா போன்ற பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி மீனாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

தொடர்புடையவை  Sasikumar மிரட்டும் நந்தன் படத்தின் Sneak Peek காட்சிகள் வெளியாகியது..!

இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுட்டு போய்ட்டிங்களே..13வது திருமண நாளில் கண்கலங்கி மீனா போட்ட பதிவு 3

விளம்பரம்

 

ஒவ்வொரு திருமண நாளிலும் தனது கணவரின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வாழ்த்து சொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தார் மீனா. இந்த நிலையில் திருமண நாளுக்கு 14 நாட்களே இருந்த நிலையில் கணவர் இறந்து விட்டதால், கடந்த வருடம் அவர் போட்ட வாழ்த்து பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் அவர் வானவில் போன்று வந்து என் வாழ்வை வண்ணமயாக்கினீர்கள், நீங்கள் கொடுத்த அந்தப் புன்னகையை நான் என்றும் அணிந்திருப்பேன் என்றும் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அவரின் 13வது திருமண நாள் வந்த நிலையில் ஒரு பதிவையும் அவர் இடவில்லை. இன்று கணவரின் புகைப்படத்தை பகிர்ந்து சோகமான ஒரு பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுட்டு போய்ட்டிங்களே..13வது திருமண நாளில் கண்கலங்கி மீனா போட்ட பதிவு 5

அதில் நீங்கள் என்னுடைய அழகான ஆசிர்வதிக்கப்பட்டவர்,ஆனால் விரைவிலேயே எங்களிடமிருந்து பறிக்கப்பட்டீர்கள். எங்கள் இதயங்களில் நீங்காத இடத்தை பிடித்திருப்பீர்கள். என்னுடைய குடும்பமும் நானும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். நல்ல உள்ளங்கள் மற்றும் அவர்களின் பிரார்த்தனைகள் எங்களுக்கு எப்பொழுதும் தேவை. உங்களைப் போன்ற அன்பு மற்றும் அக்கறையை பொழியும் நண்பர்களையும் குடும்பத்தாரையும் பெற்றதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். உங்களின் அன்பை நாங்கள் உணர்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment