2014ஆம் ஆண்டு முதல் இப்பொது வரை பாரத பிரதமராக இருந்து வரும் திரு. நரேந்திர மோடி மீதும் அவருடைய ஆட்சி அதிகாரம் மீது பல வகையிலான விமர்சங்கள் எப்போதும் எழுந்து கொண்டே இருக்கிறது. சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவது, அங்கங்கே மத கலவரங்கள் நடைபெறுவது என ஹிந்துத்துவ கொள்கைல்கள் மிக முக்கிய விமர்சனமாக வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் ‘டூயட்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். கன்னடரான தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமின்றி இந்திய அளவில் நிறைய படங்களில் பெரிய பெயரை பெற்றுள்ள இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்ததற்காக 5 முறை தேசிய விருதினை வென்றுள்ளார். அது போக 7 முறை தமிழ்நாடு அரசு விருது, 8 நந்தி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

தென்னிந்திய முழுவத்திலும் மிக பெரிய ஆளுமையை சினிமா உலகில் கொண்ட இவர் சமீப காலமாக அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக பிரகாஷ் ராஜ் ராஜ் போட்டியிட்டு இட்டு வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அது போக கடந்தாண்டு நடைபெற்ற தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலிம் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சில ஆண்டுகளாகவே மோடியின் அரசினை விமர்சித்து வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். இ[இப்பொது அதே போல அவர் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்கள் முன்னர் தான் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மேற்கூரையில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தேசியத்தை சின்னத்தை திறந்து வைத்தார்.

இது குறித்து கருது தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ், மோடி ஆட்சிக்கு வரும் முன் இருந்த ராமர், அனுமன் மற்றும் தேசிய சின்னத்தின் புகைப்படத்தையும், மோடி ஆட்சிக்கு வந்த பின்பு உள்ள ராமர், 2மற்றும் தேசியத்தின் புகைப்படத்தையும் பதிவிட்டு பாராளுமன்றத்தில் வைக்கப்படும் தேசிய சின்னம் வித்தியாசமான முறையில் இருப்பதை சுட்டி காட்டி ‘நாம் எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம்’ என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்வீட் இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
