“25 லட்சத்துக்கு பொண்டாட்டியா இருக்க சொன்னாரு – கண்ணீருடன் கூறிய நடிகை”!!

கோடிகளில் சம்பளம், ஆடம்பர வாழ்க்கை, செல்லும் இடமெல்லாம் புகழ் ரசிகர் கூட்டம் என நாம் அனைவரும் எப்போதும் நடிகைகள் மேல் ஒரு வித காழ்புணர்ச்சியோடு மட்டுமே பார்த்து வருகிறோம். ஆனால் அவர்களது வாழக்கை நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. இதற்கு பல முன்னணி நடிகைகளும் சான்றாக இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுளள்து.

"25 லட்சத்துக்கு பொண்டாட்டியா இருக்க சொன்னாரு - கண்ணீருடன் கூறிய நடிகை"!! 1

விளம்பரம்

பாலிவுட் நடிகை நீத்து சந்திரா, இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான “தீராத விளையாட்டு பிள்ளை” படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். மாதவனின் யாவரும் நலம், ஜெயம் ரவியுடன் ஆதி பகவன் போன்ற படங்களில் தமிழில் நடித்துள்ளார், விளம்பர மாடலாக இருந்த இவர், 2003ஆம் ஆண்டு விஷ்ணு என்ற தெலுங்கு படத்தில் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மொழி படங்களில் நிறையவே நடித்துள்ளார்.

"25 லட்சத்துக்கு பொண்டாட்டியா இருக்க சொன்னாரு - கண்ணீருடன் கூறிய நடிகை"!! 3

விளம்பரம்

இறுதியாக தமிழில் சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நீது சந்திரா நடனம் ஆடியிருந்தார். பின் பட வாய்ப்பு கிடைக்காததால் இப்போதும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் டிடி ரங்கோலி என்ற ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார் நீது சந்திரா.  தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு வரும் இவருக்கு சோசியல் மீடியாகளில் ரசிகர் கூட்டம் அதிகம். இந்நிலையில் சமீபத்தில் நீது சந்திரா பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர்”என்னுடைய வாழ்க்கை வெற்றிகரமான நடிகையின் தோல்வி கதை.” திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்கள் இருப்பது குறித்தும் அதில் அவர் பேசியிருந்தார்.

தொடர்புடையவை  GOAT படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மீனாட்சி..! வைரலாகும் புகைப்படங்கள்..!

"25 லட்சத்துக்கு பொண்டாட்டியா இருக்க சொன்னாரு - கண்ணீருடன் கூறிய நடிகை"!! 5

விளம்பரம்

அந்த பேட்டியில் பேசிய பொது அவர் கூறியது, “2005ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நான் தேசிய விருது வாங்கியுள்ளேன், 12க்கும் அதிகமான நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். இன்றைக்கு எனக்கு வேலை இல்லை. துவண்டு போன காலத்தில் தொழிலதிபர் ஒருவர் என்னிடம் மாதம் 25 லட்சத்தில் சம்பள மனைவியாக இருக்க முடியுமா? என்று கேட்டார். அவர் அப்படிக் கேட்டது எனக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தது. எப்படி இவ்வாறெல்லாம் கேட்க முடிகிறது என யோசித்து நான் முற்றிலுமாக உடைந்து போனேன்.இத்தனை படங்களில் நடித்த பிறகும் நான் இங்கு வேண்டப்படாதவளாக மாறிவிட்டேன். இதற்கு முன்பு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட பலமுறை எனது மனதில் வந்து சென்றது என்று மனவேதனையில் கண்கலங்கிய படி நீது சந்திரா கூறி இருக்கிறார். அந்த விடியோவை நீங்களும் காண….

விளம்பரம்

Video Courtesy – Bollywood Hungama

விளம்பரம்

Leave a Comment