மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் விஜய். இவரின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது. லியோ படம் வெளியாகி முதல் நாளிலேயே 149 கோடி ரூபாயை வசூல் செய்த நிலையில், தற்போது இவரின் கோட் படமும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. கடந்த வாரம் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த கோட் திரைப்படம் வெளியாகி வசூல் மழையை பொழிந்து வருகிறது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் பிரபுதேவா, பிரசாந்த் , அஜ்மல் என பலரும் நடித்து உள்ளனர். ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். திரையரங்கில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. நான்கு நாட்கள் வரை இப்படம் உலகம் முழுவதும் 288 கோடி ரூபாய் வசூலை பெற்று உள்ளது.

தற்போது இப்படத்தின் BTS புகைப்படங்களை இப்படத்தின் கதாநாயகி மீனாட்சி பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
View this post on Instagram