ஒரு youtube சேனலில் வெளிவந்த ‘ஆஹா கல்யாணம்’ என்ற தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரிகிடா. தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் முதல் நடிப்பிலேயே பல ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்திருந்தார். இவர் பார்த்திபன் இயக்கியுள்ள ‘இரவின் நிழல்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிவதற்கு சென்றார். ஆனால் இவரின் திறமையை பார்த்த பார்த்திபன் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். பிரிகிடாவும் தனது முழுமையான நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். அதில் ஒரு சீனில் 19 நொடிகளில் உடையை மாற்றிக்கொண்டு நடித்துள்ளார். இந்த படம் 96 மணி நேரத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்த படத்தில் வரலட்சுமி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அகிரா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த நிலையில் படம் குறித்து பிரிகிடா பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அவரிடம் படத்தில் அதிகமாக கெட்ட வார்த்தை உபயோகப்படுத்தி உள்ளது பற்றி கேட்கப்படுகிறது அதற்கு பதில் அளித்த அவர் படத்தில் கெட்ட வார்த்தை யூஸ் பண்ண கூடாதுதான். ஆனால் ஒரு இந்த கதையே ஒரு தனி மனிதனுக்கு நடந்த கதையை அடிப்படையாக கொண்டது. அந்த மனினுக்கு வாழ்க்கையில் கெட்டது மட்டும் தான் நடந்துள்ளது. இப்போ ஒரு சேரிக்குப் போனா அங்கே நாம் கெட்ட வார்த்தைகளை மட்டும தான் கேட்க முடியும். சினிமாவுக்காக மாத்தி ஏமாற்ற முடியாது, அது மக்களுக்கே தெரியும், அங்க போனா எப்படி பேசுவாங்க அந்த மாதிரி சில விஷயங்கள் எல்லாம் இந்த படத்துல இருக்கு. அத தவிர்க்கவே முடியாது. ரொம்ப ராவா காட்டணும், அது ரொம்ப உண்மையா காட்டணும்னு நினைச்சு இந்த மாதிரி சீன்கள் எடுக்கப்பட்டதாக பிரிகிடா பேசினார்.
ஒரு படத்துல நடிச்சிட்டதால பெரிய மயிறுனு நினைப்பு…
சேரி பிகேவியர் என்ன தெரியுமா நாயே?
அனைவரையும் சமமாக நடத்துவது. pic.twitter.com/kSWabt4oWe— Babu Ravindhar (@AnAmbedkarite) July 17, 2022
என்ன இது மிஸ்டர் @rparthiepan ?????
இவ்வளவு வன்மமா பேசியிருக்கும் இவங்க படத்த உங்களுக்காக தான் பாத்தோம்….
இப்போ என்ன பதில் சொல்ல போறீங்க????
தமிழக அரசு இந்த @Brigidasaga22 மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.@thirumaofficial pic.twitter.com/Iry5IrfB2o— செ. அருண்குமார் விசிக (@Arunc98015412) July 17, 2022
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த வார்த்தையை உபயோகப்படுத்தியதற்காக மனமார வருத்தம் தெரிவிப்பதாக ஒரு பதிவை ட்விட்டரில் போட்டிருந்தார் பிரிகிடா. என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். சினிமாவில் சாதிக்க நினைக்கும் சாதாரண ஒரு பெண் நான் என்று பதிவிட்டிருந்தார். அதை ரீட்வீட் செய்து பார்த்திபனும் மன்னிப்பு கோரி இருந்தார். தற்போது பிரகிடாவை ஒரு தியேட்டருக்கு அழைத்து வந்த பார்த்திபன் அந்த சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்பதாக கூறினார். அப்போது பேசிய பிரிகிடா கண்கலங்கி மன்னிப்பு கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Cineulagam