90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை குஷ்பூ. இவர் தற்போது வரை நடித்துக் கொண்டுதான் உள்ளார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் கூட ரஜினியின் முறைமாமன் மகளாக நடித்து அசத்தியிருந்தார் குஷ்பூ. இந்த நிலையில் வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கால் பதித்திருந்தார். சிவகாமி என்ற தொடரில் ஜோதி கதாபாத்திரத்திலும், நந்தினி என்ற சீரியலில் பார்வதி கதாபாத்திரத்திலும், லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மகாலட்சுமி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த நாடகம் கோகுலத்தில் சீதை. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். அந்த வகையில் அவர் அடுத்ததாக மீரா என்ற நாடகத்தை தானே எழுதி நடிக்க ஆரம்பித்திருந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த மீரா நாடகம் கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டு வந்தது. இந்த நாடகத்தை குஷ்புவே எழுதி நடித்து இருந்தார். இதில் இவருக்கு ஜோடியாக சுரேஷ் மேனன் நடித்துக் கொண்டிருந்தார். குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்கள் வெளியில் வரவேண்டும் எனவும், குடும்பத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பெண்கள் தைரியமாக வெளியில் வரவேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு செய்தியை இந்த நாடகத்தின் ப்ரோமோ மூலம் பரப்புரை செய்து இருந்தார். இதில் குஷ்பூ மகப்பேறு மருத்துவராகவும், அவரது கணவர் சுரேஷ் மேனன் இதய அறுவை சிகிச்சை மருத்துவராகவும் நடித்து வந்தனர். பெண் பிள்ளைகள் குஷ்பு இடமும், ஆண் பிள்ளைகள் அப்பா சுரேஷ் இடமும் வளர்ந்து வந்து பெரியவர்கள் ஆகிறார்கள். இங்கிருந்து இந்த கதை தொடர ஆரம்பித்தது.
All good things come to an end! We have come to an end of #Meera. Wish we could continue but realized it didn't make sense to prolong it. Want to thank @ColorsTvTamil & my team for their continuous support & encouragement. We shall be back, sooner & bigger. Till then take care ❤️ pic.twitter.com/igfA691dlB
— KhushbuSundar (@khushsundar) July 16, 2022
62 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான நிலையில் இந்த நாடகம் முடிவுக்கு வருவதாக குஷ்பூ தனது twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது குழுவினருடன் எடுத்துக்கொண்ட செல்பியை வெளியிட்ட குஷ்பூ, எல்லா நல்ல நிகழ்வுகளும் ஒருநாள் முடிவுக்கு வரும், இது தற்போது வந்து விட்டது. நாம் தொடர நினைக்கிறோம். ஆனால் அதை நீட்டிப்பதில் அர்த்தம் இல்லை என்பதை உணர்கிறேன். எனவே கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நன்றி, எனது குழு உடன் மீண்டும் வருவேன் அதுவரை காத்திருங்கள் என்று ஒரு பதிவிட்டுள்ளார் இந்த சீரியலை தனது அக்னி சினி மேக்கர்ஸ் மூலம் தயாரித்து தானே எழுதி அதில் நடித்தும் இருந்தார் குஷ்பூ. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை திடீரென நாடகத்தை நிறுத்துவதாக அவர் ட்விட்டரில் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Watch the below video…
Youtube Video Code Embed CreditsL Trend Talks