திரௌபதி படத்துல நடிச்சது ஒரு கெட்ட கனவு.! என்கிட்ட முழு கதையை சொல்லாமலே நடிக்க வைத்தனர்.

சர்ச்சைகளுக்குப் பெயர் போன இயக்குனர்களில் ஒருவர் தான் மோகன் ஜி. இவர் பழைய வண்ணாரப்பேட்டை என்ற ஒரு படத்தின் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் சில காலங்களாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த அவர் திரௌபதி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஜாதி ரீதியாகவும், நாடகக் காதல் பற்றியும் இந்த படம் பேசியிருந்தது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த படம் பிற்போக்குத்தனங்கள் நிறைந்த படம் என்றும் இயக்குனர் மோகன்ஜியையும் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வந்தனர். இருந்த போதிலும் நெகடிவ் கருத்துக்களால் கிடைத்த விளம்பரத்தை பயன்படுத்தி இந்த படம் வசூலை அள்ளிக் குவித்து இருந்தது. அடுத்ததாக இவர் இயக்கியிருந்த படம் ருத்ர தாண்டவம். இந்த படமும் விமர்சன ரீதியாக கடும் பின்னடைவை சந்தித்து இருந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

திரௌபதி படத்துல நடிச்சது ஒரு கெட்ட கனவு.! என்கிட்ட முழு கதையை சொல்லாமலே நடிக்க வைத்தனர். 1

விளம்பரம்

தற்போது இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் பாகாசசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார் மோகன்ஜி. இவர் இயக்கிய மூன்று படங்களிலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார். எனவே இந்த படத்திலும் கதாநாயகனாக ரிச்சர்டே இருப்பார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக செல்வராகவனை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் மோகன்ஜி. இதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இவர் இயக்கிய திரௌபதி படத்தின் கதாநாயகி ஷீலா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்த அவர் திரௌபதி படத்தை பற்றி மனம் திறந்து பேசி இருந்தார்.

தொடர்புடையவை  ஹரி அருண்விஜய் காம்போ.. யானை படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | Yannai Movie Release Date

திரௌபதி படத்துல நடிச்சது ஒரு கெட்ட கனவு.! என்கிட்ட முழு கதையை சொல்லாமலே நடிக்க வைத்தனர். 3

விளம்பரம்

அவர் கூறும் பொழுது திரௌபதி படத்தில் தான் நடித்ததை கெட்ட கனவாக நினைக்கிறேன், முழு கதையையும் என்னிடம் சொல்லாமலேயே என்னை நடிக்க வைத்து விட்டார்கள், இயக்குனர்கள் வெளிப்படையாக இருந்து விட்டால் இறுதியில் முடிவெடுப்பது என்னுடைய கையில் இருக்கும் என்று அவர் கூறினார். மேலும் தனக்கு அரசியல் தெரியாது, அரசியல் செய்யவும் தெரியாது, இந்தப் படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த ஒரு பாடமாக தான் நான் பார்க்கிறேன் என்றும் கூறினார். மேலும் நானும் ஹாஸ்டலில் தான் படித்தேன், அப்பொழுது உடன் படித்தவர்களிடம் நீ என்ன ஜாதி? நான் என்ன ஜாதி? என்று நான் ஒருபோதும் பார்த்து பழகியதில்லை, அப்படித்தான் நான் வளர்ந்தேன் என்றும் அவர் கூறினார். நான் தடுக்கி விழுந்து விட்டேன், அந்த காயத்திற்கு மருந்து போட்டுவிட்டு, நான் அடுத்த நல்ல விஷயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறினார். அவரின் வீடியோவை நீங்களும் காண..Watch the below video…

விளம்பரம்

Youtube video code embed credits: PT Digital

விளம்பரம்

Leave a Comment