“அவனுடைய ஜாமீனை ரத்து பண்ணுங்க….சித்ரா கணவருக்கு எதிராக நண்பரே மனு”!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா. விஜய் டிவியின் முக்கிய தொடராக இப்பொதும் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களை வென்று எடுத்தார். மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான இந்த தொடரின் மூலம் மிக தீவிர ரசிகர்களையும் இவர் பெற்றார். சில படங்களில் நடிக்க துவங்கினார். திடீரென கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

"அவனுடைய ஜாமீனை ரத்து பண்ணுங்க....சித்ரா கணவருக்கு எதிராக நண்பரே மனு"!! 1

விளம்பரம்

இந்த செய்தி சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மீடியாவையும் அதிரிச்சியுற வைத்தது. இந்த வழக்கில் இன்றும் முடிவு எட்டப்படாத நிலையில், அவருடைய தற்கொலைக்கு கரணம் அவருடைய கணவர் தான் காரணம் பெற்றோர்கள் சார்பில் அளிக்கபட்ட வழக்கின் பேரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யபட்டு பின்னர்,  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்க விடுதலை ஆனார்.

"அவனுடைய ஜாமீனை ரத்து பண்ணுங்க....சித்ரா கணவருக்கு எதிராக நண்பரே மனு"!! 3

விளம்பரம்

இப்பொது ஹேம்நாத்திற்கு அளிக்கப்பட்டுள்ள நிபந்தனை ஜமீனை ரத்து செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தக்கல் செய்யபட்டுள்ளது. ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர் எனவும் அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும் எனவும் சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது  சாட்சியம் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்ததாகவும் இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் சையத் ரோஹித் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையவை  அப்படி அசிங்கப்பட்டு எனக்கு இந்த வீட்ல இருக்கனும்ன்னு அவசியம் இல்ல | BiggBoss Ultimate

"அவனுடைய ஜாமீனை ரத்து பண்ணுங்க....சித்ரா கணவருக்கு எதிராக நண்பரே மனு"!! 5

விளம்பரம்

ஹேம்நாத்தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஹேம்நாத் தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அவரை வெளியே சுதந்தரமாக நடமாட விட்டால் சாட்சிகளை கலைப்பார் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன்,  ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

விளம்பரம்

Leave a Comment