
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பீட்சா’ படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே நல்ல வெற்றியை பதிவு செய்திருந்தார் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சிறிய டீம், தன்னுடன் குறும்படங்களில் நடித்த நாயகன் விஜய் சேதுபதி நாயகன் என கதையை நம்பி படம் எடுத்த கார்த்திகை தமிழக திரை ரசிகர்கள் கைவிடவில்லை. படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த படத்தின் முலம் தான் நடிகர் விஜய் சேதுபதி மிகவும் கவனிக்கப்படும் நாயகனாக மாறினார்.

இதனை தொடர்ந்து சித்தார்த், லட்சுமி மேனன், கருணாகரன் மற்றும் பாபி சிம்ஹா நடித்த அவரது இரண்டாவது படமான ‘ஜிகர்தண்டா’ மிகப்பெரிய வெற்றியை விமர்சன ரீதியிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹா மற்றும் எடிட்டர் விவேக் ஹர்ஷன் ஆகியோருக்கு இரண்டு தேசிய விருதுகளை வென்றனர்.

இந்த இரண்டு மாபெரும் வெற்றி படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய படங்கள் “இறைவி, மேர்குரி” படங்கள் தோல்வியை சந்தித்தன. ஆனால் பின்னர் வெளியான ரஜினியின் “பேட்ட” படம் சிறந்த விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் படம் வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல் வசூலித்தது. பின்னர் OTT-இல் வெளியான ‘ஜகமே தந்திரம்” மற்றும் “மகான்” போன்ற படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளன.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான “ஜிகர்தண்டா” படம் வெளியாகி 8 வருடங்கள் நிறைவடைந்ததை தொடந்து இப்பொது சிறிய மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளார் இயக்குனர். அதில் கடைசியில் படத்தின் 2 பாகம் உருவாகி வருவதையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
And….. pic.twitter.com/pKL2Qi4oks
— karthik subbaraj (@karthiksubbaraj) August 1, 2022