தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர ஜோடிகள் பட்டியலில் இணைந்துள்ளவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் சுமுகமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் இருவரும், அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இருவரும் அங்கு பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். விக்னேஷ் சிவன் பார்ப்பதற்கு பிரபுதேவா போலவே இருப்பதால்தான் அவரை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்டதாக நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நடிகர் ஒருவரே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பாக நயன்தாரா சிம்புவை காதலித்து வந்தார். சிம்புவுடன் காதல் முறிந்த பின்னர் பிரபுதேவாவை காதலித்து வந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பிரபுதேவாவிற்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்ததால் இவர்களுடைய காதலுக்கும், திருமணத்திற்கும் அவருடைய மனைவி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நயன்தாரா பிரபுதேவாவின் காதலும் முடிவுக்கு வந்தது. சிறிது காலம் எந்த விதமான காதல் விஷயங்களிலும் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தார் நயன்தாரா. நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் மீண்டும் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இது பற்றி கிசுகிசுக்கப்பட்ட போது அது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த நயன்தாரா, பின்னாளில் அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இருவரும் ஒன்றாக அவுட்டிங் செல்வது, கோவில்களுக்கு செல்வது, ஊர் ஊராக சென்று சாமி கும்பிடுவது என்று திருமணம் ஆகாமலேயே லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பார்ப்பதற்கு பிரபுதேவா போலவே இருந்ததால் தான், நயன்தாரா அவரை காதலித்தார் என்று நானும் ரவுடிதான் படத்தில் நடித்த ராகுல் தாத்தா போட்டு உடைத்துள்ளார்.

இந்தப் படத்தில் ரவுடி போல சிறிய காமெடி வேடத்தில் நடித்திருப்பார் ராகுல் தாத்தா. பின்னர் இவரை குக் வித் கோமாளி சீசன் 3 இல் ஒரு போட்டியாளராக விஜய் டிவி களம் இறக்கியது. அங்கு அவர் அடிக்கும் லூட்டியை பார்த்து அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது அந்த படம் குறித்தும், விக்னேஷ் சிவன் குறித்தும் ராகுல் தாத்தா சில விஷயங்களை கூறியிருக்கிறார். விக்னேஷ் சிவன் இடம் சென்று நீங்கள் பார்ப்பதற்கு ஒரு சாயலில் பிரபுதேவா போலவே இருக்கிறார் என்று கூறி இருந்ததாகவும், நயன்தாராவிடமும் சென்று விக்னேஷ் சிவன் பார்ப்பதற்கு பிரபுதேவா மாதிரி இருக்கிறார் என்றும் கூறியிருந்ததாகவும் ராகுல் தாத்தா தெரிவித்தார். ஆனால் அந்த படத்தின் போது அவர் டைரக்டர் இவர் நடிகை போலத்தான் இருந்தார்கள். பின்னர் தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது, தற்போது கல்யாணம் செய்துள்ளார்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன் என்று ராகுல் தாத்தா தனது பேட்டியில் கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Indiaglitz Tamil