“ஹிந்தி தெரியாதவனெல்லாம் இங்க படம் எடுக்குறான்…மறைமுகமாக அட்லீயை திட்டிய நயன்தாரா பட வில்லன்”!!

ராஜாராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து விஜயுடன் அடுத்தடுத்து “தெறி, மெர்சல், பீகில்” என இயக்கிய அனைத்து படங்களும் வெற்றியே.

தெறி படத்தின் மூலம் 150 கோடி வசூலை எட்டிய அட்லீ அடுத்து வெளியான மெர்சல் படத்தில் 260 கோடியை தாண்டினார்.  அதை தொடர்ந்து வந்த பிகிலில் 320 கோடிக்கு மேல் வசூலை செய்து தமிழ் சினிமாவின் மிக பெரிய இயக்குனராக உருவெடுத்தார்.

விளம்பரம்

"ஹிந்தி தெரியாதவனெல்லாம் இங்க படம் எடுக்குறான்...மறைமுகமாக அட்லீயை திட்டிய நயன்தாரா பட வில்லன்"!! 1

இவரின் படங்கள் தொடர் வெற்றியை பெற்றாலும் இவரின் மீது ஒரு மிக பெரிய குற்றசாட்டு எப்போதும் இருந்து கொண்டே வருகிறது. ராஜா ராணி மௌன ராகம் சாயலிலும், தெறி சத்ரியன் சாயலிலும், மெர்சல் அபூர்வா சகோதர்கள் மற்றும் மூன்று முகம் செயலிலும், கடைசியாக வெளியான பிகில் படம் நேரடியாக ஷாருக் கானின் “சக் தே இந்தியா” படத்தை நிறைய இடங்களில் காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக பயங்கரமாக விமர்சிக்கப்பட்டார்.

விளம்பரம்
தொடர்புடையவை  அப்பாவை விட்டு பிரிந்து குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆனாரா சூர்யா? பயில்வான் போட்ட புது குண்டு.!

பலர் இவர் மேல் குறை கூறினாலும், இவருடைய வளர்ச்சியை அது எந்த வகையிலும் தடுக்கவில்லை. தற்போது அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார். இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

"ஹிந்தி தெரியாதவனெல்லாம் இங்க படம் எடுக்குறான்...மறைமுகமாக அட்லீயை திட்டிய நயன்தாரா பட வில்லன்"!! 3

விளம்பரம்

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ‘ஜவான்’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. இதில், ஷாருக்கான் தன் முகத்தை ஒரு துணியால் மறைத்துக் கொண்டு தோன்றுவார். இதனிடையே, இப்படத்தின் டீசர் ஷாம்ரேமி இயக்கத்தில் 1990-ஆம் ஆண்டு வெளியான ‘டார்க்மேன்’ படத்தை ஒத்திருப்பதாக நெட்டீசன்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

விளம்பரம்

"ஹிந்தி தெரியாதவனெல்லாம் இங்க படம் எடுக்குறான்...மறைமுகமாக அட்லீயை திட்டிய நயன்தாரா பட வில்லன்"!! 5

இருப்பினும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு என்னவோ அதிகமாக தான் இருக்கிறது. தமிழ் திரையில் மின்னிய இயக்குனர் ஹிந்தியில் மெகாஸ்டார் ரௌவருடன் பட்ஷம் பண்ணுவதாலேயே தமிழகத்திலும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. தென்னிந்திய படங்கள் குறிப்பாக தெலுங்கு படங்கள் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் மிக பெரிய வசூலை குவிந்ததால் தொடர்ந்து பாலிவுட் முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்து வருவதாலும் நிறைய விமர்சனத்தை பாலிவுட் பிரபலங்கள் சந்தித்து வருகிறார்கள்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஆஸ்கர் நாயகனின் மனதை வருடும் குரலில் "மறக்குமா நெஞ்சம்" பாடல் வெளியானது.

"ஹிந்தி தெரியாதவனெல்லாம் இங்க படம் எடுக்குறான்...மறைமுகமாக அட்லீயை திட்டிய நயன்தாரா பட வில்லன்"!! 7

இந்நிலையில் பாலிவுட் முன்னணி இயக்குனரும், நடிகருமான அனுராக் கஷ்யப் சமீபத்திய பேட்டியில் “இந்தி தெரியாதவனெல்லாம் இந்தி படம் எடுக்குறான்” என்று சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் அவ்வாறு நடப்பது இல்லை. ஆகவே தான் தொடர்ந்து பாலிவுட் படங்கள் தோல்வியை சந்திதது வருகின்றன” என அவர் கூறியுள்ளது மறைமுகமாக இயக்குனர் அட்லீயை தாக்குவது போல இருப்பதாக ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள். இவர் தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்து பெரும் பிரபலம் அடைந்தவர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment