கவர்னருடன் அரசியல் பேசினேன்.! ஆனால் அது பத்தி எல்லாம் உங்கள்ட் ட சொல்ல முடியாது – ரஜினி

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து பேசி இருக்கிறார். வெளியே வந்த அவர் நான் கவர்னர் உடன் அரசியல் குறித்து பேசினேன், ஆனால் அது பற்றி உங்களிடம் சொல்ல முடியாது என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டிசம்பர் 5, 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் ஆகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்தார். பின்னர் ஆகஸ்ட் 7, 2018 ஆம் ஆண்டு தமிழகத்தை ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதியும் மறைந்து விட்டார்
இதனால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டதாகவும், அதை தான் வந்து நிரப்ப போகிறேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து, தனது தொண்டர்களை அவ்வப்போது சந்தித்தும் வந்தார். ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு தொண்டர்களை அழைத்து, அடிக்கடி சந்திப்புகளை நடத்தினார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்பது உறுதி என்று அவரது ரசிகர்கள் சத்தியம் செய்து கூறி வந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கவர்னருடன் அரசியல் பேசினேன்.! ஆனால் அது பத்தி எல்லாம் உங்கள்ட் ட சொல்ல முடியாது - ரஜினி 1

விளம்பரம்

சிலரோ வழக்கம் போல இவர் அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று தனது படத்தை ஓட வைப்பதற்காக இவ்வாறு கூறுகிறார் என்று ரஜினியை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். அவர்கள் விமர்சித்தது போலவே ஒரு கட்டத்தில் தான் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார் ரஜினி. தனது உடல் நிலையை காரணம் காட்டி கொரோனா பரவல் இருப்பதால் இப்போதைக்கு அரசியலுக்கு வரவில்லை, இனி எப்போதும் வரப்போவதில்லை என்றும் அவர் அறிவித்து அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று திடீரென கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார் அங்கு ஆளுநர் ஆர்.என் ரவியை அவர் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கவர்னர் அலுவலகம் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் சில பரபரப்பான தகவல்களை கூறியிருக்கிறார்.

தொடர்புடையவை  லக்குனா இப்படி இருக்கனும்!!கமல் படத்தில் ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்.

கவர்னருடன் அரசியல் பேசினேன்.! ஆனால் அது பத்தி எல்லாம் உங்கள்ட் ட சொல்ல முடியாது - ரஜினி 3

விளம்பரம்

அதில் அவர் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய எது வேண்டுமானாலும் செய்வதற்கு கவர்னர் தயாராக உள்ளதாக தன்னிடம் கூறியதாகவும், காஷ்மீரில் பிறந்து வளர்ந்த ஆளுநர், வட இந்தியாவிலேயே அதிக காலம் இருந்த்தால், தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆன்மீக உணர்வு அவரை வெகுவாக கவர்ந்து உள்ளதாக ரஜினிகாந்த் கூறினார். தமிழர்களின் கடின உழைப்பும், நேர்மையும் கவர்னருக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், கவர்னர் உடன் சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடியதாகவும், அவருடன் அரசியல் குறித்து பேசியதாகவும், அதை தற்போது உங்களிடம் சொல்ல முடியாது என்று ரஜினி கூறினார். மேலும் அரசியலுக்கு வருவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி கேட்க அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினிகாந்த் பதில் அளித்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே அது பற்றி விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதுபற்றி எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும், ஜெயிலர் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 அல்லது 25ஆம் தேதி தொடங்கும் என்றும் அவர் படத்தைப் பற்றிய அப்டேட்டையும் கூறிவிட்டு நகர்ந்தார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube video code embed credits: Thanthi TV

விளம்பரம்

Leave a Comment