அனிருத்தை என் புள்ளை மாதிரி பாக்குறேன்.! ஆடியோ விழாவில் பெருந்தன்மையாக பேசிய தனுஷ்

திருச்சிற்றம்பலம் பட ஆடியோ விழாவில் நடிகர் தனுஷ் பேசியதை அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கர்ணன் படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்த எந்த படமும் திரையில் வெளியாகவில்லை. அவர் நடித்த ஜகமே தந்திரம், மாறன், இந்த படமான அட்ரங்கீரே போன்ற படங்கள் அனைத்துமே ஓடிடி தளங்களில் வெளியாகியிருந்தன. இதனால் தனுஷின் படங்கள் ஒன்றரை வருடங்களாக திரையரங்குகளில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் தான் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்குகிறார். மித்ரன் ஜவகர் உடன் நான்காவது முறையாக களம் இறங்கி இருக்கிறார் நடிகர் தனுஷ். ஏற்கனவே இவர்களது காம்போவில் வெளியான அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளதால், திருச்சிற்றம்பலத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அனிருத்தை என் புள்ளை மாதிரி பாக்குறேன்.! ஆடியோ விழாவில் பெருந்தன்மையாக பேசிய தனுஷ் 1

விளம்பரம்

திருச்சிற்றம்பலத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் போன்ற மூன்று முன்னணி நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏழு வருடங்களுக்குப் பிறகு அனிருத்தும், தனுஷும் இணைந்து இருந்ததால் பாடல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களுமே மிக சூப்பராக அமைந்துள்ளது.்தாய்க்கிழவி பாடலும், மேகம் கருக்காதா என்ற பாடலும் தனுஷே பாடியிருக்கிறார். இந்த இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடையவை  இந்த படத்தை வடக்கான் பாத்தா, பான்பராக் வாயில காறி துப்புவான்.. பொன்னியின் செல்வன் பற்றி கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

அனிருத்தை என் புள்ளை மாதிரி பாக்குறேன்.! ஆடியோ விழாவில் பெருந்தன்மையாக பேசிய தனுஷ் 3

விளம்பரம்

அதில் அவர் பேசும் பொழுது ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு என்னுடைய படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது என்று கூறினார். அப்போது அவரது ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். அந்த சத்தம் அடங்கவே வெகுநேரமானதால் இந்த சத்தத்தை கேட்டு எவ்வளவு நாள் ஆனது என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார் நடிகர் தனுஷ். பின்னர் மாஸ் என்றால் என்ன என்று விளக்கம் அளித்தார் அதில் பத்து வில்லன்களை அடிப்பதோ அல்லது செஞ்சிடுவேன் என்று வசனம் பேசுவதோ மட்டுமே மாஸ் இல்லை என்றும் நம்மை குழந்தையாக இருக்கும்போதே நம்மை வளர்த்த பெற்றோர்கள் வயதாகும் பொழுது அவர்கள் குழந்தையாக மாறிவிடுகிறார்கள. அவர்களைப் பார்த்துக் கொள்வது தான் உண்மையான மாஸ் என்று பேசினார் அப்போது அவர்களுடைய ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் படத்தில் உடன் நடித்த ஒவ்வொருவர் பற்றியும் தனுஷ் கூறும் பொழுது அனைவரும் எமோஷனலாகி கண் கலங்கினர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment