நான் அப்படி பேசியிருக்க கூடாது.! சூர்யா கார்த்தியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சினேகன்

விருமன் இசை வெளியீட்டு விழாவில் தான் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் கவிஞர் சினேகன். இசை வெளியீட்டு விழாவிற்கு பாடல் ஆசிரியரான தனக்கு ஒரு அழைப்பிதழ் கூட வழங்கவில்லை என்று அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கோபமாக பேசியிருந்தார். அதற்கு தற்போது மன்னிப்பு கேட்டு, மற்றொரு மேடையில் சினேகன் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக், அதிதி சங்கர் ஆகியோர் நடிக்கும் படம் தான் விருமன். இந்த படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை சூர்யா – ஜோதிகாவின் சொந்த நிறுவனமான 2d நிறுவனம் தயாரித்துள்ளது. கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா. இவருடன் தற்போது நான்காவது முறையாக இணைந்துள்ளார் கார்த்தி. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நான் அப்படி பேசியிருக்க கூடாது.! சூர்யா கார்த்தியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சினேகன் 1

விளம்பரம்

இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் மதுரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த படத்தின் டிரைலரை ஷங்கர் வெளியிட்டார். மேலும் இந்த வெளியீட்டு விழாவில் சூர்யா, கார்த்தி, பாரதிராஜா, யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் சங்கர், அதிதி, மைனா வடிவக்கரசி, போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் உள்ள பாடல்களை எழுதியவர் பாடல் ஆசிரியரும் கவிஞருமான சினேகன் ஆவார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. வேறு ஒரு மேடையில் பேசும் பொழுது கலந்து கொள்ளாததற்கான காரணத்தை அவர் கூறினார். அப்போது பாடலாசிரியரான எனக்கு ஒரு அழைப்பிதழ் கூட வழங்கவில்லை, இப்படியே போனால் பாடல் ஆசிரியர் என்ற இனமே இல்லாமல் அழிந்து விடும், திரைத்துறையில் டீ கொடுப்பவர்கள், தட்டுக் கழுபவர்களை கூட மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று காட்டமாக பேசியிருந்தார் சினேகன்.

தொடர்புடையவை  காதலன் Ameer உடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய BiggBoss Pavani Reddy..!

நான் அப்படி பேசியிருக்க கூடாது.! சூர்யா கார்த்தியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சினேகன் 3

விளம்பரம்

இந்த நிலையில் நேற்று வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன், தான் அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கோரினார். தான் அவ்வாறு பேசியதற்கான காரணம், பாடல் ஆசிரியர்களுக்கான மரியாதை குறைந்து கொண்டே வருகிறது, அதை மனதில் வைத்து தான் அப்படி பேசினேன் சூர்யா மற்றும் கார்த்திக்குக்கு பல ஹிட்டான பாடல்களை நான் எழுதி இருக்கிறேன். பருத்திவீரன் படத்தில் கூட அனைத்து பாடல்களையும் நானே எழுதியிருந்தேன், தற்போது இந்த விழாவிற்கு கூட எனக்கு வர முடியாத சூழ்நிலை இருந்தது ஆனால் கலந்து கொள்ளவில்லை என்றால், ஊடகங்கள் இந்த விஷயத்தை பெரிதாக பேசும் என்பதாலேயே இந்த விழாவிலும் நான் கலந்து கொண்டேன். விருமன் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைக்காதது குறித்து பேசியது இவ்வளவு பூதாகரமாகும் என்று நினைக்கவில்லை, ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்கி விட்டன என்றும் அவர் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Little Talks

விளம்பரம்

Leave a Comment