5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு:மாணவர்களை தயார் செய்ய உத்தரவு!

5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு:மாணவர்களை தயார் செய்ய உத்தரவு! 1

தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், அதற்கேற்ற வகையில் மாணவர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தியுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்புக் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. எனினும், தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வெளியிடவில்லை என்பதால் பல்வேறு குழப்பங்கள் நிலவின.

விளம்பரம்

இதற்கிடையே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித்துறை அறிவித்தது. தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் பங்கீடு உள்ளிட்ட வழிமுறைகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன. அதன்படி 5, 8-ம் வகுப்புக்கு கல்வியாண்டு இறுதியில் எழுத்துத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் கல்வி தொடர்பான வளரறி மதிப்பீடு செயல்பாடுகளுக்கு வழங்கப்படும்.

தொடர்புடையவை  உலகத்தரத்தில் அண்ணா பல்கலைக்கழத்தில் சர்வதேச பூங்கா அமைக்கபடும் - உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி

5 ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் தொடர்பாக உள்ள அடிப்படைக் கருத்துகள், பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகளைச் சோதிக்கும் வகையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். 8-ம் வகுப்புக்கு அனைத்துப் பாடங்களுக்கும் முப்பருவ அடிப்படைக் கருத்துகள் மற்றும் பயிற்சிகளைச் சோதித்தறியும் வகையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

விளம்பரம்

இந்நிலையில், தற்போது 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.முப்பருவக் கல்வி முறையிலேயே கேள்விகள் கேட்கப்படும் என்றும், மாவட்டத்தைப் பொறுத்து பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் மாறுபடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Leave a Comment