அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!!

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!! 1

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன என, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (நவ.5) செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,

“கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆலங்குடியில் 2 செ.மீ., பேராவூரணி, அரிமலம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விளம்பரம்

மீனவர்கள் நவ.5-ம் தேதி அந்தமான் கடல் பகுதிகள், மத்தியக் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் நவ.6, 7 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திர கடற்பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடையவை  ஜெர்மனி மாணவரை திருப்பி அனுப்பிய இந்திய குடியுரிமை அதிகாரிகள்! போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்!!

அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் இயல்பு மழை அளவு 22 செ.மீ. இந்த காலகட்டத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 8% அதிகமாகும். வரும் 2-3 தினங்களுக்கு குறிப்பிடத்தகுந்த மழை இருக்காது”.இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment