அயோத்தி தீர்ப்பு ஒரு புதிய தொடக்கம்! இந்திய பிரதமர் அறிக்கை!!

அயோத்தி தீர்ப்பு ஒரு புதிய தொடக்கம்! இந்திய பிரதமர் அறிக்கை!! 1

வேற்றுமையில் ஒற்றுமையே நாட்டின் தாரக மந்திரமாக உள்ளது . அயோத்தி தீர்ப்பு நாடு முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளது. என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.நேற்று (சனி கிழமை) மாலை 6 மணிக்கு நேரலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பினை அனைத்து தரப்பினரும் முழு மனதுடன் ஏற்றுகொண்டுள்ளனர். இதுவே இந்தியாவின் கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது. இன்று அனைவரும் ஒற்றுமையாக இருந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றோம். பல வருடங்களுக்கு பிறகு வருபவர்களுக்கு இந்த தினம் இந்தியாவின் தலையாய கொள்கையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு எடுத்துகாட்டாக அமைந்த தினமாக” அமைந்துள்ளது.

விளம்பரம்

நவம்பர் 9 ஆம் தேதியான இன்று பெர்லின் சுவர் இடிந்தது. வேறுபட்ட இரு தரப்பினர் ஒன்றாக இணைந்தனர். இதே நாளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையை இணைக்கும் கர்தார்பூர் சாலை திறக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் நன்மையே. அதேபோல் இந்த நாளில் வெளிவந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இந்தியர்களுடைய ஒற்றுமையைக் காட்டியுள்ளது. இதனால் இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னேற்ற பாதையில் செல்ல முடியும் என்பதை காட்டுகிறது.” என்று பேசினார்.

தொடர்புடையவை  தமிழக அரசு உயர் கல்வியில் தான் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது - முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்.

“எவ்வளவு பெரிய வழக்காக இருந்தாலும், சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கப்படும் என இந்த வழக்கு நிரூபித்துள்ளது. சிறிது தாமதமானாலும் வழக்கின் தீர்ப்பு சட்டத்தின் பார்வையிலேயே வழங்கப்படும் என உறுதி செய்து கொண்டுள்ளது. இதனால் மக்களுக்கு நீதிமன்றத்தின்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது .” என்றார்.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment