பாக்கியலட்சுமி தொடர் அடுத்த விறுவிறுப்பான கட்டங்களுக்கு நகர்ந்து இருக்கிறது. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் குடும்ப தலைவியாக இருக்கும் பாக்யா, தனது குடும்பத்திற்காக மிகவும் கஷ்டப்படுகிறார். தினமும் சமைப்பது, மசாலா பொடி தயாரித்து விற்பது, வீட்டு வேலைகளைப் பார்ப்பது என்று வீட்டிற்காகவே உழைத்து வருகிறார். ஆனால் அவரது கணவர் கோபி தனது கல்லூரி கால தோழியான ராதிகாவை சந்திக்கிறார். ஏற்கனவே ராதிகாவும் கோபியும் கல்லூரி காலத்திலேயே காதலித்து வந்தனர். பின்னர் அந்த காதலை மறுத்து, கோபிக்கு பாக்கியலட்சுமியை அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டனர். ராதிகாவுக்கும் வேறு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் ராதிகா கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஒரு நாள் எதேச்சையாக மீண்டும் தனது கல்லூரி கால காதலியான ராதிகாவை சந்திக்கிறார் கோபி. அப்போது கணவருடன் ராதிகாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்தும், அவருடன் விவாகரத்து ஆனது குறித்தும் கோபிக்கு தெரிய வருகிறது. இதனால் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் கோபி. அங்கே ஒரு திருப்பம் என்னவென்றால் கோபியின் கள்ளக்காதலியான ராதிகாவுக்கும், மனைவியான பாக்யாவிற்கும் நட்பு ஏற்படுகிறது. இதனால் இருவரிடமிருந்தும் உண்மையை மறைக்க படாத பாடுபட்டு வந்தார் கோபி. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல கோபி ஒருநாள் பாக்யாவிடம் வசமாக மாட்டிக் கொண்டார். அன்றிலிருந்து இந்த கதை மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தற்போது பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு வீட்டிலிருந்து துரத்த முயற்சி செய்தார் கோபி. ஆனால் பாக்யா இது என் வீடு, நீங்கள் வீடு கட்ட வாங்கிய கடன் 40 லட்சத்தை நான் உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சவால் விட்டு, கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். இதனால் வீடு இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் கோபி, ஒரு நாள் ராதிகாவை ரோட்டில் வைத்து பார்க்கிறார், என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என்று மீண்டும் தனது நாடகத்தை ராதிகாவிடம் தொடங்குகிறார். அப்போது ராதிகா சம்மதம் தான் ஆனால் எனக்கு சிறிது காலம் யோசிக்க நேரம் வேண்டும் என்று கேட்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Vijay Television