மருத்துவமனையில் புகுந்த தீவிரவாதிகள்.! தனி ஆளாக சிங்க பெண்ணாக எதிர்த்து நிற்கும் கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் இந்த தொடர் கருப்பாக இருக்கும் மருமகளை ஏற்றுக்கொள்ளாத மாமியாரை எப்படியாவது ஏற்றுக் கொள்ள வைத்து விட வேண்டும் என்று கதையை தொடங்கினர். ஆனால் ஐந்து வருடங்கள் கடந்த பின்பு இந்த கதை எங்கே எங்கேயோ சென்றுவிட்டது. இதய நோய் சிறப்பு மருத்துவராக இருக்கும் பாரதிக்கு குழந்தை பெறும் பாக்கியம் அல்லை என்று, அவரது தோழி வெண்பாவால் ஏமாற்றப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் பாரதியை வேறு யாரும் திருமணம் செய்து விடக்கூடாது என்று வெண்பா சூழ்ச்சி செய்து இவ்வாறு செய்துள்ளார். ஆனால் திடீரென ஒரு நாள் பாரதி கண்ணம்மா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டார். அவருக்கு குழந்தை பிறக்காது என்று அவரது தோழியால் ஏமாற்றப்பட்டு வந்த பாரதியின் மனைவி இரட்டை குழந்தைக்கு தாயானார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மருத்துவமனையில் புகுந்த தீவிரவாதிகள்.! தனி ஆளாக சிங்க பெண்ணாக எதிர்த்து நிற்கும் கண்ணம்மா 1

விளம்பரம்

இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் பாரதி. இரட்டை குழந்தைகளில் ஒன்று கண்ணம்மா விடமும், ஒன்று பாரதியிடமும் வளர்ந்து வருகிறது. தற்போது கதைப்படி கண்ணம்மாவிடம் வளர்ந்து வரும் குழந்தைக்கு பாரதி தான் தனது அப்பா என்று தெரிய வருகிறது. பாரதிக்கும் கண்ணம்மாவிடம் வளர்ந்து வரும் குழந்தை தனக்கு பிறந்ததுதான் என்று தெரிய வருகிறது. ஆனால் இந்த கதையை ஒரு சிறிய டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்து அதன் மூலமாக முடித்து விடலாம். ஆனால் இதன் இயக்குனர் அதை செய்யாமல் கதையை எங்கெங்கோ இழுத்தடித்து வருகிறார். அதனால் கதையை முடித்து விடும்படி பலரும் இயக்குனரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடையவை  ஷாந்தி மாஸ்டர் வீட்டுக்கு சென்று தாய் கிழவி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜிபி முத்து

மருத்துவமனையில் புகுந்த தீவிரவாதிகள்.! தனி ஆளாக சிங்க பெண்ணாக எதிர்த்து நிற்கும் கண்ணம்மா 3

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாரதியின் மருத்துவமனையை தீவிரவாதிகள் கைப்பற்றி விடுகின்றனர். அதை கண்ணம்மா தனியாளாக இருந்து எதிர்கொண்டு வருகிறார். அதை தெரிந்து கொண்ட பாரதி அவர்களை மீட்டு வருவதற்காக செல்கிறார். பெரும்பாலும் இதற்குப் பிறகு கண்ணம்மாவை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளும் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்து லக்ஷ்மியும் தனது மகள் தான் என்று புரிந்து கொண்டு, கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்டு இருவரும் சேர்ந்து வாழ்வது போல் காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண… Watch the below video…

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment