பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடன இயக்குனர் அமீர். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனமாடி இருக்கிறார். பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகங்களில் வரும் நடன நிகழ்ச்சிகளுக்கும் இவர்தான் நடன இயக்குனராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் வெளியே தெரியாத அவர் பிக்பாஸ் மூலமாக தான் பலருக்கும் பரிச்சயமானார். பிக்பாஸ் சீசன் 5ல் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக இவர் உள்ளே அனுப்பப்பட்டார். உள்ளே சென்ற அமீர் இவர் அங்கு இருந்த பாவனியை காதலிப்பதாக கூறினார். வெளியே வந்த பிறகும் பாவனியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அமீர் கூறி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் படி இந்த பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 வின் டைட்டிலை அமீரும் பாவனியும் வென்றுள்ளதாக தெரிகிறது. அமீரைப் பொறுத்தவரை அவருக்கென குடும்பம் இல்லை. சிறுவயதிலேயே தனது தாயை இழந்த அவர் ஒருவர் பாதுகாப்பில் தான் வளர்ந்து வந்துள்ளார். அவருக்கு ஒரே ஒரு அண்ணன் மட்டுமே உண்டு. இவ்வளவு நாள் அவரை எந்த பொதுவெளியிலும் அமீர் காட்டியதே இல்லை. அவர் குறித்து பேசியதே இல்லை. முதல் முறையாக தனது அண்ணனை அவர் விஜய் டிவியில் காட்டியிருக்கிறார்.

தனது அண்ணன் குறித்து பேசும்போது எனக்கு இவன் மீது மிகுந்த கோபம் இருந்தது என்றும் என் தாய் சாவிற்கு இவனும் ஒரு காரணம் தான் என்று நான் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன், இவன் என்னைவிட நன்றாக நடனமாடுவான் என்று பாசத்தை பொழிந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக இருக்கிறது நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Vijay Television