ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவாவை விட்டுவிட்டு தான் மட்டும் தனி குடித்தனம் செல்ல போகிறேன் என்று கிளம்பி சென்ற பிரியா தற்போது மீண்டும் ஜீவாவின் வீட்டிற்கே வந்திருக்கிறார். காமெடியாக அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் பாகம் 2 தற்போது விஜய் டிவியில் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதில் காவியா பார்த்திபன் என்று இரு ஜோடிகளும், ஜீவா பிரியா என்ற மற்றொரு ஜோடிகளும் இருக்கின்றனர். பார்த்திபனும் ஜீவாவும் அண்ணன் தம்பிகளாக இருக்கும் நிலையில் பிரியாவும் காவியாவும் அக்கா தங்கைகளாக இருக்கின்றனர். அண்ணனுக்கு அக்கா பிரியாவையும் தம்பிக்கு தங்கை காவியாவையும் தான் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கும். பின்னர் திருமணத்தன்று கடைசி நிமிடத்தில் ஜோடிகள் மாறிவிடுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தம்பி காதலித்து வந்த காவியாவை அண்ணன் பார்த்தி திருமணம் செய்து கொள்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரியாவை தம்பி திருமணம் செய்து கொள்கிறார். இந்த குழப்பங்கள் இன்றைய நாள் வரை நீடித்து வருகிறது. ஜீவாவும் காவியாவும் தான் காதலித்து வந்தார்கள் என்கிற விஷயம் தற்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. காவியாவும் பார்த்திபனும் தங்களது வாழ்க்கை தொடங்கிய நிலையில் ஜீவாவும் பிரியாவும் இன்னும் ஒன்றாக இணைந்து வாழாமல் இருந்து வருகின்றனர். ஜீவாவும் காவியாவும் ஒரே வீட்டில் இருப்பது பிரியாவிற்கு பிடிக்கவில்லை. காதலித்த இரண்டு பேர் ஒரே வீட்டில் இருப்பதை தான் விரும்பவில்லை என்று சொல்லி பிரியா தனிக்குடித்தனம் செல்ல முடிவெடுக்கிறார். இதற்காக ஜீவாவை பலமுறை அழைத்தும் ஜீவா நான் தம்முடைய குடும்பத்தை விட்டு வரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார்.

இதனால் பிரியா மட்டும் புதிதாக ஒரு வீட்டை பார்த்து அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று தனியாக பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறார் பிரியா. அப்போது அடுப்பை அணைக்க அவர் மறந்து விட்டதால் வீடு தீப்பற்றி எரிகிறது. அப்போது வீட்டின் உரிமையாளர் வந்து முதல் நாளிலேயே என் புது வீட்டை இப்படி நெருப்பு பிடிக்க வைத்து விட்டாயே என்று சொல்லி பிரியாவை வீட்டில் இருந்து துரத்துகிறார். தீயை அணைக்க மாடிப்படியில் ஏறும் பொழுது பிரியா வழுக்கி கீழே விழுகிறார் அவரது கால் உடைகிறது. அவரை தூக்கிக் கொண்டு ஜீவா மீண்டும் அவரது வீட்டிற்க்கே வருகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television