துப்பாக்கியால் சுட்ட ஜீவானந்தம்.! பயத்தில் உறைந்த ஆதி குணசேகரன், ஜனனி.! மாஸான ப்ரோமோ.!

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த பரபரப்பான கட்டங்கள் எட்டி வரும் நிலையில் தற்போது ஒரு புது ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஜீவானந்தத்தின் அலுவலகத்தில் அனைவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, தற்போது துப்பாக்கியுடன் ஜீவானந்தம் உள்ளே என்ட்ரி கொடுக்கிறார். அதை பார்த்து ஜனனி, ஆதி குணசேகரன், ஞானம் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பவர்களின் பிபியை எகிற வைக்கும் அளவிற்கு நாளுக்கு நாள் புதிய ட்விஸ்ட்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பலரும் எதிர்பார்க்காத வகையில் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜீவானந்தம் கையில் துப்பாக்கியுடன் உள்ளே என்ட்ரி கொடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியால் சுட்ட ஜீவானந்தம்.! பயத்தில் உறைந்த ஆதி குணசேகரன், ஜனனி.! மாஸான ப்ரோமோ.! 1

விளம்பரம்

ஆதி குணசேகரனின் அப்பத்தாவின் 40 சதவீத பங்குகளை தனது பெயருக்கு மாற்றி இருக்கிறார் ஜீவானந்தம். இந்த விஷயத்தை ஆடிட்டர் ஆதி குணசேகரனிடம் வந்து கூறுகிறார். ஆனால் ஆதி குணசேகரனுக்கோ ஜீவானந்தம் யார் என்றே தெரியாத நிலையில், தற்போது அவரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஜீவானந்தம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஆதி குணசேகரன் அவரின் அலுவலகத்தில் வந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இத்தனை நாள் ஜீவானந்தம் ஆதி குணசேகரன் அனுப்பிய ஆள் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் ஜனனிக்கும் இந்த விஷயம் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அவரும் ஜீவானந்தத்தின் அலுவலகத்திற்கு வருகிறார். இந்த நிலையில் ஜீவானந்தத்தின் அலுவலகத்தில் இருக்கும் ஆட்களுடன் ஆதி குணசேகரன், ஞானம், கதிர் என அனைவரும் கைகலப்பில் ஈடுபடுகின்றனர். சண்டை பெரிதாகிறது.

தொடர்புடையவை  எண்ணி இத்தன நாளுக்குள்ள ஜீவா எங்களட்ட சேந்துடுவான்..! ஜனார்த்தனிடம் சவால் விட்ட தனம்.!

துப்பாக்கியால் சுட்ட ஜீவானந்தம்.! பயத்தில் உறைந்த ஆதி குணசேகரன், ஜனனி.! மாஸான ப்ரோமோ.! 3

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில், ஜீவானந்தத்தின் அலுவலகத்தில் சண்டை முற்றவே ஜீவானந்தம் துப்பாக்கி எடுத்து வானத்தை நோக்கி சுடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். மேலும் ஜனனி இத்தனை நாள் ஜீவானந்தம் ஆதி குணசேகரன் அனுப்பிய ஆள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தார். அப்படி இல்லை என்றால் இந்த ஜீவானந்தம் யார் இவருக்கும் அப்பத்தாவிற்கும் என்ன தொடர்பு என்று புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment