அப்பா என்று அழைக்க மகள் பிறந்தாள்.! செம்பருத்தி சீரியல் நடிகர் சொன்ன குட் நியூஸ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செம்பருத்தி சீரியலில் ஆதிக்கு தம்பியாக அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜே கதிர். இவருக்கு சில தினங்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்துள்ளதை சோசியல் மீடியா பக்கத்தின் மூலமாக அறிவித்திருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் செம்பருத்தி. இது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது. ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்த தொடருக்கு ஆரம்பத்தில் பல ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல கதையை எங்கெங்கயோ திருப்பி, கதையே இல்லாமல் நகர்த்திக் கொண்டிருந்தார் இயக்குனர். இதனால் இந்த நாடகத்தை பலரும் பார்ப்பதையே நிறுத்தி விட்டனர். பார்க்கும் சிலரும் நாடகத்தை விரைந்து முடிக்குமாறு இயக்குனருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அப்பா என்று அழைக்க மகள் பிறந்தாள்.! செம்பருத்தி சீரியல் நடிகர் சொன்ன குட் நியூஸ் 1

விளம்பரம்

 

இந்த நிலையில் கடந்த மாதம் இந்த நாடகம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதில் நடித்த நடிகர்கள் பலரும் வேறு சேனல்களில் கமிட் ஆகிய நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் ஆதிக்கு தம்பியாக அருண் கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிஜே கதிர் தனது instagram பக்கத்தில் தனக்கு மகள் பிறந்திருப்பதாக அறிவித்திருந்தார். விஜே கதிர் ஆங்கராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதற்கு முன்பாக அவர் ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். பின்னர் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் பொழுதே பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  என்ன முதல்ல நீ வெளிய பாத்து இருக்கியா? கமல் முன்பு தனலட்சுமியை திட்டிய விக்ரமன்.!

அப்பா என்று அழைக்க மகள் பிறந்தாள்.! செம்பருத்தி சீரியல் நடிகர் சொன்ன குட் நியூஸ் 3

 

விளம்பரம்

இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு சிந்து என்கிற பெண்ணுடன் திருமணமானது. இந்த தம்பதியினருக்கு தற்போது மகள் பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கதிர் ஆயிரம் உறவு என அழைத்தாலும் அப்பா என்ற, ஒற்றை வார்த்தையில் என்னை கட்டி இழுக்க வந்த ஆசை மகளே, ஆயுள் முழுவதும் உந்தன் முழுமதி முகத்தில் மலரும் புன்னகை கண்டே எந்த நாட்கள் நகர வேண்டுமடி வைரமே என்று தன் மகளுக்காக ஒரு கவிதையின் எழுதி பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kathirvel Kandasamy (@vjkathir_)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment