நேற்று திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி குறித்து ஒருவர் மோசமாக பதிவிட்டதற்காக நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்திரன். இவர் நேற்று திருப்பதி கோயிலில் வைத்து எளிமையாக சின்னத்திரை நடிகையாக இருக்கும் மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு யாரையும் பெரிய அளவில் அவர் அழைக்கவில்லை. புகைப்படங்களை மட்டுமே தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருந்தார். இதன் பின்னர் தான் அவருக்கு திருமணம் ஆனதே அனைவருக்கும் தெரிய வந்தது. விரைவில் இந்த திருமணம் குறித்து என் மனைவியுடன் லைவில் உங்களை சந்திக்கிறேன் என்று மட்டுமே பதிவிட்டிருந்தார்.

மகாலட்சுமியை பொருத்தவரை அவர் விஜேவாக தனது வாழ்க்கை தொடங்கினார். சன் மியூசிக்கில் தனது வாழ்க்கையை ஆரம்பித்த அவருக்கு, சின்னத்திரை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசு என்ற நாடகத்தின் மூலமாக சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தார். பின்னர் அவர் பல நாடகங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். அவர் கடைசியாக ஜீ தமிழில் தேவதையை கண்டேன் என்ற நாடகத்தில் ஈஸ்வர் என்பவர் உடன் நடித்து வந்தார். அப்போது ஈஸ்வருக்கும் மகாலட்சுமிக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக ஈஸ்வரன் மனைவி பரபரப்பை கிளப்பியிருந்தார். மேலும் இவர்கள் குறித்து போலீசிலும் புகார் அளித்திருந்தார். ஆனால் இதை மறுத்த மகாலட்சுமி நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று விளக்கம் அளித்து இருந்தார்.

பின்னர் எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்த மகாலட்சுமி, திடீரென நேற்று தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். ஆனால் சிலர் வன்மத்தை கொட்டி வருகின்றனர். ரவீந்தரை உருவக்கேலி செய்தும் சிலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர். குறிப்பாக கிளியை வளர்த்து இப்படி பன்னியிடம் கொடுத்து விட்டீர்களே என்ற ஒரு மீம்ஸை பார்த்து சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் கொதித்துப் போயிருந்தார். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இதுதான் உங்கள் ஆம்பள புத்தி, நயன்தாரா த விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்தாலும் நயன்தாரா மீது தான் தப்பு, மகாலட்சுமி ரவிந்தரை திருமணம் செய்தாலும் மகாலட்சுமி இது தான் தப்பு, இதுதான் உங்கள் ஆம்பள புத்தி என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஒருவருக்கு பிடித்திருந்தால் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு. ஒருவரின் வாழ்க்கையில் சென்று தனிப்பட்ட முறையில் தாக்குதலில் ஈடுபடுவதும் அவர்களை வைத்து உருவ கேலி செய்வதும், எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இவர்களெல்லாம் என்றைக்கு திருந்த போகிறார்களோ?