வெந்து தணிந்தது காடு ஆடியோ லாஞ்ச்-க்கு ஹெலிகாப்டரில் செம்ம கெத்தாக வந்து இறங்கிய சிம்பு..வைரல் வீடியோ

வெந்து தணிந்தது காடு இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடைக்கு சிம்பு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. விழா மேடைக்கு முன்னால் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக மிகப் பெரிய மார்க் செய்யப்பட்டிருந்தது. இதனால் சிம்பு கண்டிப்பாக ஹெலிகாப்டரில் வந்து இறங்குவார் என்று ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் தற்போது சிம்புவும் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்குப் பிறகு கௌதம் வாசுதேவ் மேனனும், சிம்புவும் இணைந்து உருவாகி உள்ள படம்தான் வெந்து தணிந்தது காடு. உடல் எடை ஏற்றத்தால் மிகவும் அவதிப்பட்டு வந்த சிம்புவுக்கு சரியான படங்கள் எதுவும் அமையவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெந்து தணிந்தது காடு ஆடியோ லாஞ்ச்-க்கு ஹெலிகாப்டரில் செம்ம கெத்தாக வந்து இறங்கிய சிம்பு..வைரல் வீடியோ 1

விளம்பரம்

பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருந்த மாநாடு படத்திற்காக அவர் உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்து இருந்தது. தற்போது அவருக்கு பல படங்கள் கைவசம் உள்ளன வெந்து தணிந்தது காடுக்குப் பிறகு பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்று ஆடியோ லாஞ்ச் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் அறிவித்திருந்தது. இந்த விழாவில் கமல், உதயநிதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடையவை  சாதிச்சிட்ட பா..! மாதவனை நேரில் அழைத்து பெருந்தன்மை காட்டிய சூப்பர்ஸ்டார்.! நெகிழ்ந்து போன மாதவன்

வெந்து தணிந்தது காடு ஆடியோ லாஞ்ச்-க்கு ஹெலிகாப்டரில் செம்ம கெத்தாக வந்து இறங்கிய சிம்பு..வைரல் வீடியோ 3

விளம்பரம்

தற்போது எதிர்பார்த்தபடியே விழா மேடைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கி இருக்கிறார் நடிகர் சிம்பு. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது..நீங்களும் இந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Cinema

விளம்பரம்

Leave a Comment