நீங்க பண்ணா சரி, வனிதா பண்ணா தப்பா? வனிதா பற்றி கேள்வி கேட்ட நெறியாளர், பதில் கொடுத்த ரவீந்தர்

கடந்த ஒரு வாரமாக இணையத்தில் பேசு பொருளாக இருக்கும் ஒரு செய்தி தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருமணம். இவர்கள் இருவருமே விவாகரத்து ஆனவர்கள், முதல் திருமணம் இருவருக்கும் கசந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டது தற்போது திருப்பதி கோயிலில் வைத்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்கள். செப்டம்பர் ஒன்றாம் தேதி திருப்பதியில் வைத்து இவர்களது திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் யாரையுமே அழைக்கவில்லை, திருமணம் முடிந்த பிறகு இருவரும் பல தொலைக்காட்சிகளில் தோன்றி தொடர்ந்து பேட்டியளித்து வருகின்றனர். தற்போது அதுபோன்ற பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்க பண்ணா சரி, வனிதா பண்ணா தப்பா? வனிதா பற்றி கேள்வி கேட்ட நெறியாளர், பதில் கொடுத்த ரவீந்தர் 1

விளம்பரம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த அவர்கள் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர். நெறியாளர் பல்வேறு கிடுக்குப்பிடியான கேள்விகளை கேட்டிருக்கிறார். இந்த நெறியாளர் பெரிய பெரிய அரசியல்வாதிகளையே துளைத்து துளைத்து கேள்வி கேட்கும் ஒரு நபர் ஆவார். அவரிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர் இந்த தம்பதிகள். மகாலட்சுமியிடம் பணத்திற்காக தானே இப்படி ஒருவரை திருமணம் செய்து கொண்டீர்கள்? இதே போல் கருப்பாக குண்டாக இருக்கும் ஒரு ஏழையை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஆனால் எந்த கேள்விக்கு மேல் கோபப்படாமல் நிதானமாகவே இருவரும் பதில் அளித்து வந்தனர். மேலும் வனிதா பற்றிய கேள்வியும் ரவீந்திரிடம் எழுப்பப்பட்டது.

தொடர்புடையவை  தலைவர் வடிவேலு நடிக்கும் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!

நீங்க பண்ணா சரி, வனிதா பண்ணா தப்பா? வனிதா பற்றி கேள்வி கேட்ட நெறியாளர், பதில் கொடுத்த ரவீந்தர் 3

விளம்பரம்

வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் கொல்ல முயன்ற போது ரவீந்தர் அதை கடுமையாக எதிர்த்தார். ஏனென்றால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்த நிலையில், விவாகரத்து கூட பெறாமல் வனிதாவை அவர் மூன்றாவது திருமணம் செய்தார். இதனால் பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவாகவும், வனிதாவிற்கு எதிராகவும் ரவீந்தர் பல கருத்துக்களை கூறி வந்தார். இதனால் ரவீந்திரருக்கும், வனிதாவுக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இருவரும் கடுமையான வார்த்தைப் மோதல்களில் ஈடுபட்டனர். இது குறித்து கேள்வி கேட்ட நெறியாளர், வனிதாவிற்கு ஒரு நியாயம்? உங்களுக்கு ஒரு நியாயமா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது கூறிய ரவிந்தர் என் திருமணத்தால் யாரும் அழவில்லை, நாங்கள் முறையாக விவாகரத்து பெற்ற பின் தான் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் வனிதா விஷயம் அப்படி இல்லை என்று வனிதா பற்றி பல கருத்துக்களை தொடர்ந்து கூறினார்.

நீங்க பண்ணா சரி, வனிதா பண்ணா தப்பா? வனிதா பற்றி கேள்வி கேட்ட நெறியாளர், பதில் கொடுத்த ரவீந்தர் 5

விளம்பரம்

ரவீந்தர் – மகாலட்சுமியின் முழு பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த முழு பேட்டியை காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sathiyam TV

விளம்பரம்

Leave a Comment