தலைவர் வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!

நகைச்சுவை நடிகராக திரைத் துறையில் அறிமுகமாகி சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியவர் வைகைப் புயல் வடிவேலு. தன் சிறப்பான நகைச்சுவை ஆற்றலால் ரசிகர்கள் பலரைச் சம்பாதித்தவர். இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர். 1960 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் வடிவேலு. இவர் மதுரையில் ஒரு கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வந்த ராஜ்கிரணுடன் இவருக்கு அறிமுகம் கிடைத்தது. பின்னர் சென்னைக்கு வந்து படத்தில் நடித்த தொடங்கினார். 1991ம் ஆண்டு ராஜ்கிரண் தயாரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானார். அந்த படத்தில் இவர் பாடும் ‘போடா போடா புண்ணாக்கு’ பாடல் மிகப் பிரபலமானது.

தலைவர் வடிவேலு நடிக்கும் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..! 1

விளம்பரம்

பின்னர் அன்று தொடங்கி சங்கர் இயக்கிய காதலன் திரைப்படத்திற்கு முன்னர் வரை இவர் செந்தில் கவுண்டமணியின் உடன் இணைந்து மூன்றாவதாக காமெடி செய்து வந்தார். காதலன் படத்திலிருந்து இவர் தனியாக காமெடி செய்ய ஆரம்பித்தார். சில காலமாக வடிவேலுக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் ஒதுங்கியே இருந்தார். பின்னர் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதனால் மீண்டும் காமெடி பக்கமே திரும்பி இருக்கிறார்.

தொடர்புடையவை  "அட கொடுமையே"!! தனியார் நிகழ்வு என கூறி அழைத்து மேடையில் சமந்தாவை ஆட சொல்லிய சத்குரு!!

தலைவர் வடிவேலு நடிக்கும் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..! 3

விளம்பரம்

தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2, உதயநிதி ஹீரோவாக நடிக்கும் மாமன்னன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, பிக்பாஸ் ஷிவானி நாராயணன், ரெட்டிங் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படம் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below Video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment