பாலாவுடன் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட மௌன ராகம் சத்யா.!

ரஞ்சிதமே பாடலுக்கு குக் வித் கோமாளி பிரபலம் பாலாவும், மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனாவும் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள பாடல் தான் ரஞ்சிதமே. வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடலை இளைய தளபதி விஜயே பாடியிருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருக்கிறார். முதல் பாடலே மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. மேலும் பாடல் சுமார் மில்லியன் பார்வையாளர்களை கடந்து நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் ரீல்ஸ் செய்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

பாலாவுடன் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட மௌன ராகம் சத்யா.! 1

விளம்பரம்

தளபதி விஜய் போலவே உடை அணிந்து கொண்டும், அவரைப் போலவே ஸ்டெப்ஸ் போட்டும் இந்த பாடலுக்கு பலர் ரீல்ஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாலாவுடன் இணைந்து தற்போது ரவீனாவும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்திருக்கிறார்் ரவீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சக்தியாக இவர் பல இல்லத்தரசிகளின் மனங்களை கவர்ந்திருக்கிறார். 20 வயதே ஆகும் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ராட்சசன் திரைப்படத்தில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். பின்னர் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து வந்தார். சில நடன நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கெடுத்திருக்கிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு தொடர் என்றால் அதே மௌன ராகம் தான்.

தொடர்புடையவை  அட நம்ம சிவாங்கியா இது? பரதநாட்டியம் ஆடி ரசிகர்களை சொக்க வைத்த சின்னத்திரை ஹாசினி.!

பாலாவுடன் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட மௌன ராகம் சத்யா.! 3

விளம்பரம்

இந்தத் தொடரில் இவர் சக்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை பெற்றுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து ஏதாவது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சிறுவயதில் இருந்தே நடனம் கற்றுக் கொண்ட அவர், வெளியில் நடனமாடி அதை தனது instagram பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடலுக்கு பாலாவுடன் இணைந்து ஆடியுள்ள வீடியோ பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment