திருமணத்தை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது..! நல்ல பெண் அமையும் வரை காத்திருப்பேன்..சிம்பு பேச்சு

தமிழ் உலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசி உள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்ல மணப்பெண் அமைவதற்காக காத்திருப்பதில் தவறில்லை. நல்ல மணப்பெண்ணுக்கு காத்திருக்கிறேன் என்று அவர் பேசினார். நடிகர் சிம்பு சிறு வயதிலிருந்தே தனது தந்தையுடன் நடித்து தற்போது தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் சிம்பு. அப்போது சென்னையில் பேட்டி அளித்த அவர், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பதாகவும், மாநாடு வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.

திருமணத்தை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது..! நல்ல பெண் அமையும் வரை காத்திருப்பேன்..சிம்பு பேச்சு 1

விளம்பரம்

அதேபோல வெந்து தணிந்தது காடு படமும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று தோற்றங்களில் வருகிறேன், 19 வயது இளைஞனாகவும் நடித்திருக்கிறேன், 40 வயது மதிக்கத்தக்கவராகவும் நடித்திருப்பதாக கூறினார். இந்த படம் வெற்றி பெற்றால் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருப்பதாக கூறினார். மேலும் மாநாடு படமும் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். மேலும் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்திருந்த விக்ரம் படம் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர் அதேபோல ஒரு படத்தில் பல கதாநாயகர்கள் நடிக்கும் படம் எடுக்கப்பட்டால் அந்த படத்தில் நடிக்க தயாராக இருப்பதாகவும், ரஜினி, அஜித், விஜய் என்று யாருடன் வேண்டுமானாலும் இணைந்து நடித்த தயாராக இருப்பதாகவும் கூறினார்.

தொடர்புடையவை  தொடர்ந்து நடக்கும் வசூல் வேட்டை.! 5வது நாள் முடிவின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.!

திருமணத்தை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது..! நல்ல பெண் அமையும் வரை காத்திருப்பேன்..சிம்பு பேச்சு 3

விளம்பரம்

என்னை மணக்கோலத்தில் பார்க்க எனது தாயும் தந்தையும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது, அவசர கோலத்தில் திருமணம் செய்துவிட்டு பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பிரச்சினைகள் என எதுவும் வரக்கூடாது என்ற பயத்தால் அதை தள்ளிப் போட்டு இருக்கின்றேன். எனக்காக துணை வரும் வரை காத்திருக்கிறேன், நல்ல மணப்பெண் அமைவதற்காக காத்திருப்பதில் எந்த தவறும் இல்லை. சிலர் இரண்டாவது மூன்றாவது திருமணங்கள் செய்து கொள்கின்றனர் சிலர் காதலித்து விட்டு பிரிகிறார்கள், ஆனால் இது போல் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க காத்திருப்பதில் தவறு ஒன்றும் இல்லை, ஒரு படம் முடிந்த பின் தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறேன். முத்த காட்சிகள், புகைபிடிக்கும் காட்சிகள், நெருக்கமான காட்சிகளை என் படங்களில் திணிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். பத்து கதைகள் தயார் செய்து வைத்துள்ளேன். விரைவில் ஒரு படத்தை இயக்குவேன் என்று அவர் பேசினார்.

விளம்பரம்

Leave a Comment