வீடு வீடாக வரப்போறோம்! பிளிப்கார்ட்டின் அறிவிப்பு!!

வீடு வீடாக வரப்போறோம்! பிளிப்கார்ட்டின் அறிவிப்பு!! 1

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமேசான், பிளிப்கார்ட், பதஞ்சலி போன்ற 52 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளது . அதில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்கள், அதனை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் இதனை மேற்கொள்ள தவறியதாகக் கூறி அமேசான், பிளிப்கார்ட், பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை எடுக்க போவதாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அதன் ஆபத்து குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்திருக்கிறது.

விளம்பரம்

இதற்கு முதற்கட்டமாக நடவடிக்கை எடுக்க மும்பை, பெங்களூர், டெஹ்ராடூன், கொல்கத்தா, டெல்லி, புனே, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த மையங்களில் மட்டும் நுகர்வோர்களிடமிருந்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் அப்படி பெறப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு உட்படுத்த உள்ளதாகவும், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை பல்வேறு வகைகள் பல்வேறு விதத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைக்கும் என்பதால் இந்த முடிவை துணிச்சலாக அறிவித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment