கவுதம் கம்பீரை காணவில்லை! ஒட்டப்பட்ட போஸ்ட்!!

கவுதம் கம்பீரை காணவில்லை! ஒட்டப்பட்ட போஸ்ட்!! 1

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமாக விளங்கும் கவுதம் கம்பீரை டெல்லியில் காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்ததன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து ஆலோசனைக்கூட்டம் நவம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் பங்கேற்காத முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், இந்தூரில் நடைபெற்ற இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், இந்தூரில் உள்ள கடையில் தன்னோடு கம்பீர் ஜிலேபி சாப்பிடும் புகைப்படம் ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண் ட்விட்டரில் வெளியிட்டார்.

விளம்பரம்

இந்த புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், கம்பீர் இப்படி பொழுதுபோக்கில் இருப்பது கண்டுபிடிக்கப்பட வேண்டிய விஷயம் என்று நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து குரல் எழும்புகிறது. இந்த நிலையில், டெல்லியில் கவுதம் கம்பீரை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

விளம்பரம்

Leave a Comment