
கார்த்திகை மாதம் முதல் சபரிமலையில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் என்பது வழக்கம். சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகாத நிலையில், தீர்ப்பு வெளியாகும் வரை பெண்களை அனுமதிப்பது இல்லை என கேரள அரசு கூறியுள்ளது.
பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி தரப்படாது என அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்.
விளம்பரம்
இந்நிலையில் இன்று சபரிமலைக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்த 10 பெண்களை போலீஸார் பிடித்து திரும்ப அனுப்பியுள்ளனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டம் நிலவி வந்தது.
விளம்பரம்