வனிதா விஜயகுமார் இந்த பெயரை சமூக வலைத்தளங்களில் கேட்காத நாட்களே இல்லை என்று கூறும் அளவிற்கு வைரலாக இருக்கும் ஒரு பெண்மணி. இவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகளாவார். இவர் ஆரம்பத்திலிருந்து தனது தாய் தந்தையுடன் சண்டையிட்டு மீடியாவில் வைரலான நபராக வலம் வந்தார். பின்னர் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தனர். சீசன் 3ல் போட்டியளராக கலந்து கொண்டார். அங்கும் தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பியவராக இருந்து வந்தார் வனிதா. 1995ஆம் ஆண்டு நடிகர் விஜய் உடன் சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். தனக்கு நடிப்பது ஒத்து வரவில்லை என்று திரைத்துறையில் இருந்து விலகினார். சிறிது காலத்திற்குப் பின்னர் மீண்டும் படங்களை இயக்குவது, தயாரிப்பது என்று பிசியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் வனிதாவுக்கு சின்னத்திரை நடிகர் ஆகாஷ் என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு விஜய ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறார். ஆகாசுடன் நடந்த விவாகரத்துக்கு பின்னர் வனிதா இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜோவிகா, ஜெயனிதா என்ற இரு மகள்கள் உள்ளனர். பின்னர் இருவரையும் திருமணம் செய்து கொண்டு தனது இரு மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார் வனிதா. இதில் மூத்த கணவருக்கு பிறந்த விஜய ஸ்ரீஹரியை சிறுவயதிலேயே தாத்தா விஜயகுமார் பிரித்து அழைத்து சென்று விட்டார். ஸ்ரீஹரி வெளிநாட்டில் படித்துவிட்டு தற்போது குறும்படங்களில் நடித்து வருகிறார். வனிதா தனது மகள்கள் ஜோவிகா மற்றும் ஜெயனிதா உடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், ஜெயனிதாவை அவரது தந்தை அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. வீடியோக்கள் போட்டோக்கள் என எதிலும் தனது இளைய மகள் ஜெயனிதாவை வனிதா காட்டுவதில்லை.

சமீபத்தில் வனிதா மகன் ஸ்ரீஹரி இன்ஸ்டாகிராமில் தான் நடிக்கும் குறும்படங்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் வனிதாவின் மகனா என்று கேள்வி கேட்க, இல்லை நான் ஆகாஷின் மகன் என்று பதில் அளித்து இருந்தார். இது அப்போதே சர்ச்சையானது. பலரும் என்னதான் இருந்தாலும் வனிதா உன்னை பெற்ற தாய் நீ இவ்வாறு பேசக்கூடாது என்று பலரும் அறிவுரைகளை கூற தொடங்கினர். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் வனிதாவிடம் கேட்கப்பட்டது. ஆனால் ஸ்ரீஹரி அவ்வாறு கூறினாரா என்று எனக்கு தெரியவில்லை என வனிதா கூற அந்த ஸ்கிரீன் சாட்டை காண்பித்து, இந்த கேள்வியை கேட்டனர் செய்தியாளர்கள்.

அப்போது பேசிய வனிதா, அவன் கூறியது உண்மை தானே? ஆளு மட்டும் தான் வளர்ந்து இருக்காரு, அறிவு வளரல, எனக்கும் என் மகனுக்கும் எந்த மனஸ்தாபமும் இல்லை, நான் நேரில் இருந்திருந்தால் ஓங்கி கன்னத்திலேயே ஒரு அறை விட்டிருப்பேன் என்று கூறினார். மேலும் கொஞ்சம் லூசு அப்படித்தான் பேசுவான். அவன் கொஞ்சம் அவன் தாத்தா விஜயகுமார் மாதிரி, விஜயகுமார் ரத்தம் என்று வனிதா கூறிய வீடியோ வைரலாகி இருக்கிறது.
