மனைவிக்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று உணவு கொடுத்த ரவீந்தர்.. ரொமான்ஸ்ல பின்னி எடுக்குறாரே

சமீபத்தில் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு வைரல் ஜோடிகள் தான் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி. இவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்கள். எனவே ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமாக சில படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவர் தனது படத்தில் நடித்துக் கொண்டிருந்த மகாலட்சுமி என்பவரை ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திருப்பதியில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு திரைத்துறையினர் யாரையும் அழைக்காமல் குடும்பத்தினரை மட்டும் வைத்து திருமணம் செய்து கொண்டனர். புகைப்படங்களை மட்டும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து திருமணமான செய்தியை அனைவருக்கும் தெரிவித்து இருந்தனர்.

மனைவிக்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று உணவு கொடுத்த ரவீந்தர்.. ரொமான்ஸ்ல பின்னி எடுக்குறாரே 1

விளம்பரம்

இவர்களின் திருமணத்தை பலரும் வாழ்த்தியிருந்த போதிலும், பலர் இவர்களை உருவ கேலி செய்தும் பணத்திற்காக மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்றும் கிண்டல் அடித்து வந்தனர். ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் இருவரும் பலமுறை விளக்கம் அளித்து விட்டனர். மகாலட்சுமி கூறும் போது தனது தந்தை பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர். தானும் மாதம் 3 லட்சம் சம்பாதிக்கிறேன் எனவே பணத்திற்காக ரவீந்தரை திருமணம் செய்யவில்லை, மனதை பார்த்து தான் திருமணம் செய்து உள்ளேன் என்று பலமுறை விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து இந்த தம்பதிகள் இருவரும் சமூக வலைத்தளங்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர். மேலும் சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்புடையவை  பயம்னா என்னனு தெரியனும்னா Devara கதையை கேட்கணும்..! Junior NTR அதிரடியில் மிரட்டும் Devara படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகியது..!

மனைவிக்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று உணவு கொடுத்த ரவீந்தர்.. ரொமான்ஸ்ல பின்னி எடுக்குறாரே 3

விளம்பரம்

எந்த நிலையில் ரவிந்தர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் சன் டிவியில் மகாலட்சுமி ‘அன்பே வா’ என்னும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். காலை அவர் உணவை மறந்து விட்டு சென்று விட்டார். எனவே தானே நேரில் சென்று அவருக்கு உணவு வழங்கியிருக்கிறேன். அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்து, இன்று என் மனைவிக்காக டெலிவரி பாயாக மாறுகிறேன், ஞாயிற்றுக்கிழமை ஃபேமிலி டைம் என்று சொல்வார்கள் ஆனால் என் மனைவி இன்று ஷூட்டிங்கிற்கு சென்று விட்டாள், என் தாயார் சமைத்துக் கொடுத்த சைவ உணவை நான் எடுத்துக் கொண்டு சென்றேன், மஹாலெட்சுமி பாத்திரங்களை மறக்காகமல் கொண்டு வா இல்லையேல் மாமியார் கொடுமை மட்டுமல்ல, நானும் டெலிவரிபாயாக வேலைக்கு சேர்வதை அம்மா உறுதி செய்வார் என்று பதிவிட்டு இருந்தார்.

மனைவிக்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று உணவு கொடுத்த ரவீந்தர்.. ரொமான்ஸ்ல பின்னி எடுக்குறாரே 5

விளம்பரம்

அதற்கு பதில் அளித்த மகாலட்சுமி கண்டிப்பாக, அத்தை சமையல் நன்றாக இருந்தது, சுவையாக உணவு சமைத்துக் கொடுத்த அத்தைக்கு நன்றி என்று பதில் அளித்து இருக்கிறார்.

தொடர்புடையவை  ரஜினியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து படமா? இயக்குநர் சிவாவின் புதிய திட்டம்!

மனைவிக்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று உணவு கொடுத்த ரவீந்தர்.. ரொமான்ஸ்ல பின்னி எடுக்குறாரே 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment