பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் காவியா அறிவுமணி நாடகத்தை விட்டு விலகுவது உறுதியாகி இருக்கிறது. குடும்ப பங்கான தொடர்களில் முன்னிலை வகிப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 அண்ணன் தம்பிகள் எவ்வாறு ஒற்றுமையாக கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறார்கள் என்பது குறித்த கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் மூன்றாவது தம்பியாக வரும் கதிருக்கு ஜோடியான கதாபாத்திரம் தான் முல்லை. ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தா.ர் கதிருக்கும் முல்லைக்கும் இடையே இருக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே பலரும் இந்த நாடகத்தை விரும்பி பார்க்கத் தொடங்கினர். பின்னர் திடீரென ஒரு நாள் விஜே சித்ரா இறந்து விட்டதாக செய்தி வந்தது. அவர் அறை ஒன்றில் தூக்கு மாட்டி இறந்து விட்டதாக தகவல்கள் பரவின.

விஜே சித்ராவின் இழப்பை பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்தது. பின்னர் அந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி முல்லையாக நடித்து வந்தார். இவர் பாரதி கண்ணம்மாவில் பாரதியின் தந்தையாக அறிவு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் அந்த நாடகத்தில் இருந்து விலகி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் காவியாவை முல்லையாக ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக காவியாவை ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் சமீப காலமாகவே காவியாவும் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது. தற்போது இது உண்மையாகவே நடந்துள்ளது. காவியா தற்போது தான் ஆர்க்கிடெக்ட் படிப்பை முடித்து டிகிரி வாங்கி இருக்கிறார். மேலும் அவர் பிக்பாஸுக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவலின்படி காவியா கதாபாத்திரத்தில் சரண்யா துராடி நடிக்க இருப்பதாக தெரிகிறது. விஜே சித்ரா இறந்த பொழுது அவரின் நண்பரான சரண்யா இந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் சரண்யா அப்போது அந்த தகவலை மறுத்து இருந்தார். இந்த முறை அவர்தான் நடிக்க இருப்பதாக உறுதியான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றது. சரண்யா துராடி ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமாகினர். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த சீரியல் என்றால் அது ஆயுத எழுத்து தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியலில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். சீரியல் ஆரம்பித்த சில தினங்களில் நாடகம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் முல்லை கதாபாத்திரத்தில் இவரே நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.