பாக்யலட்சுமி சீரியலில் நடிக்க வந்த நடிகர் சித்தார்த்.! வெளியான ப்ரோமோ இதோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு நடிகர் சித்தார்த் என்ட்ரி கொடுத்துள்ளார். தனது படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் சீரியலுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் வெள்ளித் திரையில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் சித்தார்த் தற்போது இந்த சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க வந்துள்ளார் அந்த ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சியில் தற்போது வெளியிட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்யலட்சுமி சீரியலில் நடிக்க வந்த நடிகர் சித்தார்த்.! வெளியான ப்ரோமோ இதோ.! 1
இன்றைக்கு வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இனியா நிலா பாப்பாவை வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டு இருக்கிறார். பின்னர் அவருக்கு தண்ணீர் எடுத்து வருவதற்காக இனியா உள்ளே சென்றபோது நிலா காணாமல் போய்விடுகிறார். இதை இனியா வீட்டில் உள்ள அனைவரிடமும் கூட அனைவரும் வயதில் நிலாவை தேடுகின்றனர். அப்போது வெளியில் வந்து பார்த்தபோது நிலா சித்தார்த்துடன் இருக்கிறார். அப்போது என் மகளை காப்பாற்றியதற்கு மிக்க நன்றி என்று அமிர்தா கூறுகிறார். பின்னர் சித்தார்த்தை வீட்டிற்கு அழைத்து வந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  முக்கியத்துவம் இல்லை.! எதிர்நீச்சல் சீரியலில் இருந்து ஒரேடியாக நீக்கப்பட்ட நடிகை.! யார் தெரியுமா?

பாக்யலட்சுமி சீரியலில் நடிக்க வந்த நடிகர் சித்தார்த்.! வெளியான ப்ரோமோ இதோ.! 3

அப்போது பேசும் சித்தார்த் இந்தக் குழந்தையை பார்க்கும் பொழுது எனக்கு சுந்தரி ஞாபகம் வந்துவிட்டது. அவள் என்னை சித்தா என்று அழைப்பார் என்று கூறுகிறார். சித்தா என்றால் சித்தப்பா அதை சுருக்கி அவர் அவ்வாறு அழைப்பார் என்று கூறுகிறார். சித்தா என்கிற படத்தில் நடித்து வருவதால் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment